ரூ.13,290 விலையில் புதிய பானாசோனிக் எலுகா (Eluga) நோட் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எலுகா வரிசை மொபைலில் இணைந்துள்ள எலுகா நோட் ஆஃப்லைன் வழியாக விற்பனை செய்யப்பட உள்ளது.

5.5 இன்ச் முழு ஹெச்டி ( 1920 x 1080 pixels ) ஐபிஎஸ் திரையுடன் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தினை அடிப்படையாக கொண்ட ஃபிட்ஹோம் தளத்தில் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் 64-bit MT6753 3 ஜிபி ரேம் உடன் இணைந்த 32 ஜிபி சேமிப்பு மற்றும் கூடுதலாக மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 32 ஜிபி வரை அதிகரிக்க இயலும்.

1080p வீடியோ பதிவு வசதியுடன் கூடிய 6P லென்ஸ் மற்றும் 3 எல்இடி ஃபிளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் ரியர் கேமரா பெற்றுள்ளது. முன்பக்கத்தில் 4P லென்ஸ் கொண்ட 5 மெகாபிக்சல் கேமரா பெற்றுள்ளது. மேலும் 3000mAh சேமிப்பு பேட்டரி ,Bluetooth 4.0, Wi-Fi, GPS மற்றும் இரு சிம் ஆப்ஷனுடன் 4G LTE ,  VoLTE ஆதரவினை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பானாசோனிக் எலுகா நோட் நுட்பவிபரம்

 •  திரை ; 5.5 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே (1920 x 1080 pixels) 
 • இயங்குதளம் ; ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ 
 • பிராசஸர் ; 1.3 GHz மீடியாடெக் 64-bit MT6753  
 • ரேம் ; 3 GB 
 • கேமரா ; 16 MP பிரைமரி கேமரா மூன்று எல்இடி ஃபிளாஷ் 
 • முன்பக்க கேமரா ; 5 MP 
 • சேமிப்பு ; 32 GB (MicroSD upto 32 GB) 
 • பேட்டரி; 2500mAh 
 • சிம் – இரு சிம் கார்டு
 •  மற்றவை ; 4G LTE  VoLTE ,3G, Bluetooth, WiFi, GPS, IR பிளாஸ்டர்
 • விலை ; 13,290
 • போட்டியாளர்கள் ; லெனோவா சூக் இசட் 1 ,சியோமி ரெட்மிநோட் 3 மற்றும் லீ ஈகோ லீ2 போன்றவை ஆகும்.

பானாசோனிக் எலுகா நோட் ஸ்மார்ட்போனில்  ஐஆர் பிளாஸ்டர் எனப்படும் ரிமோட் கன்ட்ரோல் ஆப்ஷனை பெற்றுள்ளது.இதன் வாயிலாக டிவி,ஏசி,டிவிடி போன்ற அம்சங்களுக்கு ரிமோட்டாக பயன்படுத்த இயலும். ஆனால் கைரேகை ஸ்கேனர் வசதி இல்லை.