மிக அகலமான 7 இன்ச் திரையுடன் ரூ.13,400 விலையில் சாம்சங் கேலக்ஸி ஜே மேக்ஸ் பேப்ளெட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேலக்ஸி J மேக்ஸ் ஜூலை மாத இறுதி முதல் விற்பனைக்கு கிடைக்கும். மேலும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு டபூள் டேட்டா சலுகை 6 மாதங்கள் கிடைக்கும்.

ரூ.13,400 விலையில் சாம்சங் கேலக்ஸி ஜே மேக்ஸ்  பேப்ளெட்  விற்பனைக்கு அறிமுகம்

சாம்சங் பேப்ளெட் வரிசையில் விற்பனைக்கு வந்துள்ள கேலக்ஸி ஜே மேக்ஸ் 7 இன்சு WXGA (1280 × 800 pixels) திரையுடன் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸருடன் இணைந்த 1.5 ஜிபி ரேம் பெற்று ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தில் 16 ஜிபி வரையிலான இன்ட்ர்னல் மெமமரி மற்றும் 200 ஜிபி வரை மைக்ரோஎஸ்டி கார்டு பயன்படுத்தி மெம்மரியை அதிகரிக்கலாம்.

8 மெகாபிக்சல் ரியர் கேமரா ஆட்டோஃபோகஸ் மற்றும் எல்இடி ஃபிளாஷ் f/1.9 aperture உடன் இணைந்து கிடைக்கும் . செல்ஃபீ கேமரா 2 மெகாபிக்சல் ஆகும். இதன் பேட்டரி பேக்கப் 4000எம்ஏஹெச் கொண்டுள்ளது. 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, பூளூடூத் 4.0 மற்றும் ஜிபிஎஸ் போன்ற அம்சங்களும் உள்ளன.

ரூ.13,400 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சாம்சங் கேலக்சி ஜே மெக்ஸ் பெப்ளெட் ஜூலை இறுதிவாரத்தில் விற்பனைக்கு கிடைக்கும். மேலும் ரூ.4,500 மதிப்புள்ள ஏர்டெல் டபூள் டேட்டா சலுகை 6 மாதங்கள் வரை கிடைக்கும். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here