ரிலையன்ஸ் குழுமத்தின் சில்லறை வர்த்தக பிரிவின்  LYF பிராண்டில் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனாக  Lyf எர்த் 2 ரூ.20,999 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.20,999 விலையில் Lyf எர்த் 2 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம்

ஸ்மார்ட்+ செக்யூரிட்டி என இரண்டு கோட்பாட்டினை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள எர்த் 2 ஸ்மார்ட்போன் மிக சிறப்பான பாதுகாப்பு அம்சங்களை கொண்ட மொபைலாக விளங்கும். பேட்டர்ன்/பின் லாக் , ரெட்டினா லாக் மற்றும் கைரேகை ஸ்கேனர் என  மூன்று விதமான போன் அன்லாக் சிஸ்டத்தை பெற்றுள்ள எர்த் 2 மொபைலில் படங்கள் மற்றும் வீடியோ , சமூக வலைதள ஆப்ஸ் போன்றவற்றை என்கிரிப்ட் செய்து பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம்.

இரு சிம் ஸ்லாட்களை பெற்றுள்ள மொபைல்போனில் ஒரு சிம் கார்டு மட்டும் 4ஜி தொடர்பினை பெறலாம். 2500mAh நான்-ரிமுவெபிள் பேட்டரியுடன் 32ஜிபி வரையிலான சேமிப்பு மற்றும் கூடுதலாக மைக்ரோஎஸ்டி கார்டு வழியாக 64ஜிபி வரை அதிகரிக்க இயலும்.

Lyf  எர்த் 2 நுட்ப விபரங்கள்

டிஸ்பிளே ; 5.0 இன்ச்  ஹெச்டி (1920 x 1080 pixels) IPS 2.5D டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
பிராசஸர் ; 1.5GHz ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 615 பிராசஸர்
இயங்குதளம் ; ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் 
ரேம் ; 3 GB ரேம்
முன் மற்றும் பின் கேமரா; 13 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் எல்இடி ஃபிளாஷ் கேமரா
சேமிப்பு ; 32GB (MicroSD upto 64GB)
பேட்டரி ; 2500mAh
விலை ; 20,999

கருப்பு , கோல்ட் , வெள்ளை மற்றும் பச்சை ஆகிய வண்ணங்களில் எர்த் 2 கிடைக்கும்.

ரூ.20,999 விலையில் Lyf எர்த் 2 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம்ரிலையன்ஸ் எல்ஒய்எஃப் பிராண்டில் ரூ.3,999 முதல் ரூ.21,999 வரையிலான விலையில் 4ஜி தொடர்பினை கொண்டுள்ள மொபைல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here