ரூ.25,000 விலையில் மிகச்சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய டாப் 5 ஸ்மார்ட்போன்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம். சிறப்பான் செயல்திறன் , கேமரா , அதிக வசதிகள் போன்றவற்றை கொண்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

1. ஒன் ப்ளஸ் 2

உலகயளவில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள ஒன் ப்ளஸ் 2 ஸ்மார்ட் போன் தரம் உயர்ந்த அலுமினிய மற்றும் மெக்னீசியம் கலந்த மெட்டல் பாடியால் உருவாக்கப்பட்டுள்ளது. மிக நேர்த்தியான டிசைன் தாத்பரியங்களுடன் 5.5 இன்ச் ஹெச்டி திரையை கொரில்லா கிளாஸ் 4 பெற்று 1.8 GHz ஆக்டோ கோர் ஸ்நாப்டிராகன் 810 பிராஸெசருடன் 4GB ரேம் பெற்றுள்ளது. மிக தெளிவான படங்களை வழங்கக்கூடிய வகையில் லேசர் ஆட்டோ ஃபோக்ஸ் , டியூவல் எல்இடி ஃபிளாஸ் போன்றவற்றுடன் 13MP ரியர் கேமரா மற்றும் 5MP முன்பக்க கேமராவினை பெற்றுள்ளது.

ஃபிங்கர்பிரின்ட் சென்சார் , 4K  ரெக்கார்டிங் வசதி ,  இரு நானோ சிம்கள் , 4G தொடர்பு , 330mAh பேட்டரி போன்றவற்றுடன் 16GB , 64GB இரண்டு விதமான  இன்டரனல் ஸ்டோரேஜ் வசதியில் கிடைக்கின்றது.  மைக்ரோ எஸ்டி கார்டு பயன்படுத்த இயலாது. ஆன்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தினை அடிப்படையாக கொண்ட ஆக்சிஜன் இயங்குதளத்தில் இயங்குகின்றது. தற்பொழுது மேம்படுத்தப்பட்ட 6.0 மார்ஷ்மெல்லா அப்டேட் நேற்று முதல் கிடைக்கின்றது.

அமேசான் வழியாக எக்ஸ்குளூசிவாக வாங்க ;

One PLus 2 Rs.22,999 (64GB) : W3Schools

 One PLus 2  Rs.20,999 (16GB) :W3Schools

2. சோனி எக்ஸ்பீரியா Z3+

சோனி நிறுவனத்தின் எக்ஸ்பீரியா Z3+ ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 5.1 இயங்குதளத்தின் வாயிலாக 2GHz ஸ்நாப்டிராகன் 810 பிராசெஸருடன் 3GB ரேம் கொண்டு செயல்படுகின்றது. 32GB இன்டர்னல் மெம்மரியுடன் 128GB வரையிலான மைக்ரோ எஸ்டி கார்டினை பயன்படுத்தி கொள்ள இயலும்.

 5.2 இன்ச் ஃபுல் ஹெச்டி திரை ,  20.7 MP ரியர் கேமரா மற்றும் 5.1 MP முன்பக்க கேமராவை பெற்றுள்ள எக்ஸ்பீரியா Z3+ மொபைலில் வாட்டர்ப்ரூஃப் ஆப்ஷன் உள்ளது.

   அமேசான் எக்ஸ்குளூசிவ் ;  W3Schools

3. சியோமி மீ 5

சியோமி நிறுவனத்தின் மீ பிராண்டின் மீ 5 மொபைலில் மெட்டலிக் ஃபிரேமுடன் கூடிய 3D கிளாசினை வளைவுகளில் பெற்றுள்ள மீ 5 மொபைல்போனில் 3GB ரேமுடன் 1.8 GHz 64-bit குவாட்கோர் ஸ்நாப்டிராகன் 820 பிராஸெசரை பெற்றுள்ளது.  இதில் 5.15 இன்ச் ஹெச்டி டிஸ்பிளேவுடன் கூடிய கொரில்லா கிளாஸ் , 16MP டியூவர் எல்இடி பிளாஷ் ரியர் கேமரா , 4MP முன்பக்க கேமரா , 32GB இன்டர்னல் மெம்ரி , 4G  , VoLTE , ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர் என பலவற்றை பெற்றுள்ளது. மைக்ரோஎஸ்டி கார்டு ஆப்ஷன் இல்லை.

மீ 5 விலை ரூ. 24,999

சியோமி நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே கிடைக்கின்றது. www.mi.com/in/

4. யூ யூடாப்பியா

யூ நிறுவனத்தின் புதிய யூ யூடாப்பியா ஸ்மார்ட்போனில் 4GB ரேமுடன் 2.0 GHz குவோட்கோர் பிராஸெசரை பெற்றுள்ளது.  இதில் 5.2 இன்ச் ஹெச்டி டிஸ்பிளேவுடன் கான்கேர் கிளாஸ் , 21MP டியூவர் எல்இடி பிளாஷ் ரியர் கேமரா , 8MP முன்பக்க கேமரா , 32GB இன்டர்னல் மெம்ரி , 4G  , ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர் என பலவற்றை பெற்றுள்ளது. மைக்ரோஎஸ்டி கார்டு ஆப்ஷன்  128GB வரை உள்ளது.

யூ யூடாப்பியா விலை ரூ. 24,999

அமேசான் வழியாக எக்ஸ்குளூசிவாக வாங்க ;  ஸ்டாக் இல்லை

5. ஹூவாய் ஹானர் 7

ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் சீரிஸ்யில் வெளிவந்துள்ள  ஹூவாய் ஹானர் 7 மொபைலில் 3GB ரேமுடன் 2.2 GHz + 1.5 GHz Hisilicon Kirin 935 ஆக்டோகோர் பிராஸெசரை பெற்றுள்ளது.  இதில் 5.2 இன்ச் ஹெச்டி டிஸ்பிளேவுடன் , 20MP டியூவர் எல்இடி பிளாஷ் ரியர் கேமரா , 8MP முன்பக்க கேமரா , 16GB இன்டர்னல் மெம்ரி , 4G  , ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர் என பலவற்றை பெற்றுள்ளது. மைக்ரோஎஸ்டி கார்டு ஆப்ஷன்  128GB வரை உள்ளது.

ஹூவாய் ஹானர் 7 விலை ரூ. 22,999

ஃபிளிப்கார்ட் வழியாக வாங்க ;