தொடக்கநிலை ஆண்ட்ராயடு ஸ்மார்ட்போன் ஒன்றை ரூ.2899 விலையில் கார்பன் ஏ91 ஸ்ட்ரோம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கார்பன் A91 ஸ்ட்ரோம் 4 இன்ச் டிஸ்பிளே மற்றும் 512 எம்பி ரேம் பெற்றுள்ளது.
குறைந்த விலையில் கார்பன் வெளியிட்டுள்ள ஏ91 ஸ்ட்ரோம் மொபைல்போன் அமேசான் தளத்தின் வாயிலாக பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட உள்ளது. 3ஜி வசதியுடன் கூடிய மொபைலில் 2200mAh பேட்டரியை பெற்று 8 மணி நேரம் வரை அழைப்புகளை பேச இயலும்.
கார்பன் A91 ஸ்ட்ரோம் நுட்ப விபரம்
- திரை ; 4 இன்ச் WVGA டிஸ்பிளே (480 x 800 pixels)
- இயங்குதளம் ; ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப்
- பிராசஸர் ; 1.2GHz குவாட்-கோர்
- ரேம் ; 512MB
- கேமரா ; 2MP பிரைமரி கேமரா
- முன்பக்க கேமரா ; 0.3MP செல்ஃபீ கேமரா
- சேமிப்பு ; 4 GB (MicroSD upto 32 GB)
- பேட்டரி; 2200mAh
- சிம் – இரு சிம் கார்டு ஸ்லாட்
- மற்றவை ; 3G, Bluetooth, WiFi, GPS, Infrared
- விலை ; 2,899
தொடக்கநிலை மற்றும் முதல்முறையாக ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு ஏற்ற மாடலாக நிலையிறுத்தப்பட்டுள்ள கார்பன் A91 ஸ்ட்ரோம் அமேசான் வழியாக கிடைக்கும்.