ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிராண்டில் புதிய 6ஜிபி ரேம் பெற்ற ஹானர் 8 ப்ரோ 29,999 ரூபாய் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் தளத்தில் ஜூலை 10ந் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

ரூ.29,999 க்கு ஹானர் 8 ப்ரோ விற்பனைக்கு அறிமுகம்..!

ஹானர் 8 ப்ரோ

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஹானர் 8 ப்ரோ மாடல் 29 ஆயிரத்து 999 விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் முக்கிய அம்சங்களை அறிந்து கொள்ளலாம்.

ரூ.29,999 க்கு ஹானர் 8 ப்ரோ விற்பனைக்கு அறிமுகம்..!

டிசைன் மற்றும் டிஸ்பிளே

மிகவும் ஸ்டைலிசான டிசைன் அமைப்புடன் கூடிய ஹூவாய் ஹானர் 8 ப்ரோ மாடலில்  5.7-இஞ்ச் QHD (1440×2560 பிக்சல்) LTPS எல்சிடி டிஸ்பிளே பெற்றிருப்பதுடன் கிளாஸ் பாதுகாப்பிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 வழங்கப்பட்டுள்ளது. கருப்பு, கோல்டு மற்றும் நீலம் போன்ற வண்ணங்களில் கிடைக்க உள்ளது.

ரூ.29,999 க்கு ஹானர் 8 ப்ரோ விற்பனைக்கு அறிமுகம்..!

பிராசஸர் & ரேம்

ஹூவாய் நிறுவனத்தின் சொந்த பிராசஸரான Kirin 960 ஆக்டோ-கோர் சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்ற மாடலில் 6ஜிபி ரேம் வழங்கப்பட்டு 128ஜிபி வரையிலான உள்ளடங்கிய மெமரி வழங்கப்பட்டுள்ளது. கூடுதலான சேம்மிப்பினை 128ஜிபி வரை விரிவாக்க மைக்ரோஎஸ்டி அட்டைகான ஸ்லாட் கொண்டுள்ளது.

கேமரா

கேமரா பிரிவில் இந்த ஸ்மார்ட்போனில் பின்புறத்தில் 12 மெகாபிக்சல் இரட்டை பிரிவு கேமரா வழங்கப்பட்டு கூடுதலாக இரட்டை டோன் எல்இடி ஃபிளாஷ், f/2.2 அப்ரேச்சர், ஆட்டோஃபோகஸ், 4K வீடியோ பதிவு செய்யும் திறன் கொண்டதாக அமைந்துள்ளது.

ரூ.29,999 க்கு ஹானர் 8 ப்ரோ விற்பனைக்கு அறிமுகம்..!

முன்புறத்தில் செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என 8 மெகாபிக்சல் கேமரா பல்வேறு சிறப்பு வசதிகளுடன் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் தளத்தை அடிப்படையாக கொண்ட EMUI 5.1 இயங்குதளத்தில் செயல்படுகின்ற ஹானர் ப்ரோ 8 மொபைலில் 4000mAh திறன் பெற்ற பேட்டரியால் இயக்கப்படுகின்றது. இந்த பேட்டரயின் சாதரன பயன்பாட்டில் இரு நாட்களுக்கும், அதிகப்படியான பயன்பாட்டில் 1.44 நாட்கள் வரை பேட்டரி தாங்கும் திறன் கொண்டது என ஹூவாய் தெரிவிக்கின்றது.

மற்றவை

இந்த ஆண்ட்ராய்டு ஹூவாய் ஹானர் 8 ப்ரோ மொபைலில் 4G VoLTE ஆதரவு, டூயல் பேன்டு Wi-Fi 802.11 a/b/g/n/ac, யூஎஸ்பி Type-C, புளூடூத் v4.2, 3.5mm ஹெட்போன் ஜாக் மற்றும் NFC போன்றவை கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.

விலை

ஹூவாய் ஹானர் 8 ப்ரோ 6ஜிபி ரேம் 128ஜிபி உள்ளடங்கிய மெமரி ஆப்ஷனுடன் ரூ.29,999 விலையில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

ரூ.29,999 க்கு ஹானர் 8 ப்ரோ விற்பனைக்கு அறிமுகம்..!

எங்கே வாங்கலாம்

அமேசான் பிரைம் தினத்தை முன்னிட்டு ஜூலை 10ந் தேதி அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கும் மாலை 6 மணியிருந்து, மற்றவர்கள் அனைவருக்கும் ஜூலை 13ந் தேதி பகல் 12 மணி முதல் விற்பனைக்கு கிடைக்கும்.