பானாசோனிக் T44 லைட் ஸ்மார்ட்போன் மொபைல் 3ஜி ஆதரவுடன் கூடிய ரூ.3199 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரு சிம் கார்டுகளுடன் பட்ஜெட் விலையில் அமைந்துள்ளது.
டி44 லைட் 3ஜி ஆதரவுடன் WVGA (800×480 pixels) 4 இன்ச் திரையுடன் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸருடன் 512 எம்பி ரேம் பெற்றுள்ளது. 8 ஜிபி இன்டர்னல் மெம்மரி இடவசதியுன் கூடுதலாக மைக்ரோஎஸ்டி 32ஜிபி பயன்படுத்தி கொள்ளலாம்.
2 மெகாபிக்சல் ரியர் கேமரா உடன் இனைந்த பிளாஷ் மற்றும் முன்பக்க கேமரா 0.3 மெகாபிக்சல் இடம்பெற்றுள்ளது. 2400mAh பேட்டரி பெற்றுள்ளது. GSM 800/900/1800/1900, 3G, Wi-Fi, மற்றும் புளூடூத் இணைப்பினை கொண்டுள்ளது. ரோஸ் கோல்டு , சாம்பியன் கோல்டு மற்றும் எலக்ட்ரிக் பூளூ ஆகிய வண்ணங்களில் இடம்பெற்றுள்ளது.
பானாசோனிக் டி44 லைட் நுட்ப விபரங்கள் :
- டிஸ்பிளே ; 4 இன்ச் WVGA (800×480 pixels) டிஸ்பிளே திரை
- பிராசஸர் ; 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக்
- ரேம் ; 512 MB
- சேமிப்பு ; 8ஜிபி இன்டர்னல் மெம்மரி மற்றும் மைக்ரோ எஸ்டி 32 ஜிபி
- கேமரா ; 2 மெகாபிக்சல் பிளாஷ்
- முன்பக்க கேமரா; 0.3 மெகாபிக்சல்
- ஆதரவு ; 2ஜி ,3ஜி ஆதரவு
ஸ்னாப்டீல் வழியாக திங்கள்கிழமை முதல் எக்ஸ்குளூசிவாக விற்பனை செய்யப்படுகின்றது.