இன்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய 4G தொடர்புடைய இன்டெக்ஸ் க்ளவுட் குளோரி 4G செல்போன் ரூ.3,999 விலையில் எக்ஸ்குளூசிவாக ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

க்ளவுட் குளோரி மொபைல் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தில்  1.2 GHz  மீடியாடெக் MT 6735M குவாட்-கோர் பிராசெஸருடன் 1GB ரேம் மற்றும் 8GB இன்ட்ர்னல் மெம்மரியை பெற்றுள்ளது. மேலும் 32GB வரையிலான மைக்ரோஎஸ்டி கார்டு பயன்படுத்தி விரிவுப்படுத்தி கொள்ள இயலும்.

டியூவல் எல்இடி ஃபிளாஷ் உடன் இணைந்த 5MP ரியர் கேமரா மற்றும் 2MP முன்பக்க கேமரா ஆகியவற்றுடன் 4G தொடர்புடன் 1800 mAh பேட்டரியை பெற்றுள்ளது.

ஃபிளிப்கார்ட் வழியாக எக்ஸ்குளூசிவ் விற்பனை தொடங்கியுள்ளது. இன்டெக்ஸ் க்ளவுட் குளோரி 4G மொபைல் போனில் வெள்ளை மற்றும் கருப்பு என இரு வண்ணங்கள் உள்ளது.

இன்டெக்ஸ் க்ளவுட் குளோரி 4G மொபைல் வாங்க ;