ரூ.5,990 விலையில் கார்பன் அவுரா பவர் ஸ்மார்ட் போன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவுரா பவர் மொபைலில் 4G VoLTE மற்றும் 4000MAh பேட்டரியை பெற்றுள்ளது.
சாம்பியன் , நீலம் மற்றும் கருப்பு என இரு வண்ணங்களில் கிடைக்கின்ற அவுரா பவர் ஸ்மார்ட்போனில் 5 இன்ச் FWVGA (480×854 pixels) ஐபிஎஸ டிஸ்பிளே திரையுடன் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்துடன் 1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸருடன் இணைந்த 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்ட்ரனல் மெம்மரி மற்றும் 32 ஜிபி மைக்ரோஎஸ்டி கார்டு இணைத்து கொள்ளலாம்.
கார்பன் அவுரா பவர் ஸ்மார்ட்போனில் 8 மெகாபிக்சல் எல்இடி பிளாஷ் ரியர் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா பெற்றுள்ளது. அதிக நிறன் வாய்ந்த 4000mAh பேட்டரி சிறப்பான பேக்கப் உடன் நாள் முழுமைக்கும் அதிக பயன்பாடுகளை பயன்படுத்தினாலும் கிடைக்கும்.
கார்பன் அவுரா பவர் நுட்ப விபரம்
- திரை ; 5 இன்ச் FWVGA (480×854 pixels) டிஸ்பிளே
- இயங்குதளம் ; ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப்
- பிராசஸர் ; 1 GHz குவாட் கோர்
- ரேம் ; 1 GB
- கேமரா ; 8 MP பிரைமரி கேமரா எல்இடி ஃபிளாஷ்
- முன்பக்க கேமரா ; 5 MP செல்ஃபீ கேமரா
- சேமிப்பு ; 8 GB (MicroSD upto 32 GB)
- பேட்டரி; 4000mAh
- சிம் – இரு சிம் கார்டு ஸ்லாட்
- மற்றவை ; 4G VoLTE , 3G, Bluetooth, WiFi, GPS
- விலை ; 5,990