பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும்  க்ரியோ நிறுவனத்தின் க்ரியோ மார்க் 1 ஸ்மார்ட்போன் ரூ.6000 தள்ளுபடி சலுகையில் ரூ.13,999 விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

ரூ.6000 விலை சலுகையில் க்ரியோ மார்க் 1  ஸ்மார்ட்போன் விலை ரூ.13,999

க்ரியோ மார்க் 1 மொபைல் ரூ.19,999 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது ரூ.6000 குறைக்கப்பட்டுள்ளது.  மார்க் 1 மொபைல் 5.5 இன்ச் குவாட் ஹெச்டி திரை, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 உடன் இணைந்து முழு மெட்டல் பாடியால் உருவாக்கப்பட்டுள்ளது. 

1.95 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ X10 பிராசஸர் உடன் இணைந்த 3ஜிபி ரேமை பெற்றுள்ளது. 32 ஜிபி மெமமரியுடன் கூடுதலாக 128 ஜிபி வரையிலான மைக்ரோ எஸ்டி கார்டு பயன்படுத்த இயலும். 21 மெகாபிக்சல் கேமரா சோனி IMX230 பெற்று சிறப்பான முறையில் தெளிவான படங்களை வழங்கும். முன்பக்க கேமரா 8 மெகாபிக்சலை பெற்றுள்ளது.

ரூ.6000 விலை சலுகையில் க்ரியோ மார்க் 1  ஸ்மார்ட்போன் விலை ரூ.13,999

அதிரடியான அம்சமாக இந்த மொபைலில் ஆண்ட்ராய்டு 5.1 இயங்குதளத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஃப்யூவல் (FUEL) என்ற பெயரிலான தனியுரிமை இயங்குதளத்தினை கொண்டு செயல்படுகின்றது. ஸ்மார்ட்போன் திருடுபோகாமல் தடுப்பதற்க்கு அதி நவீன பாதுகாப்பு அம்சத்தினை கொண்டிருக்கின்றது.

க்ரியோ மார்க் 1 சிறப்பம்சங்கள்

1. மார்க் சென்ஸ் ஆப்ஷன் மூலம் இருமுறை முகப்பு பட்டனை தொட்டு டைப் செய்தால் நமக்கு தேவையான தகவல் போனில் எங்கிருந்தாலும் உடனே கிடைக்கும்.

2. முக்கியமான பணிகளில் ஈடுபட்டுள்ளபோது வருகின்ற அழைப்புகளை ஏற்கும் விதமாக எக்கோ என்ற ஆப்ஷன் செயல்படுகின்றது. இதன் வாயிலாக அழைப்பவர்களின் தகவல்களை வாய்ஸ் மெசேஜ் ஆக கேட்டுவைத்துக்கோள்ளும். இதன் ஹைலைட் என்னவென்றால் எந்த ஒரு இணைய தொடர்பும் , நெட்வொர்க் தொடரும் தேவை இல்லை.

3. ரிட்ரீவர் எனப்படும் அம்சம் நாம் வேறொரு புதிய சிம்கார்டினை பொருத்தினாலே மின்னஞ்சல் வாயிலாக தகவலை பெற்றுக்கொள்ளலாம். இணைய தொடர்பு தேவையில்லை . ஃபேக்ட்ரி ரீசெட் செய்திருந்தாலும் வேலை செய்யும்.

4. மேலும் ஸ்மார்ட் ஃபார்வோர்டிங் இரு சிம்கார்டுகளில் ஏதேனும் ஒன்றில் டவர் இல்லையென்றால் மற்ற சிம்கார்டுக்கு அழைப்புகள் தானியங்கி முறையில் ஃபார்வேட் ஆகும்.

5.ஸ்மார்ட் ரோமிங் , ஸ்பேம் தகவலை நீக்கும் இன்பாக்ஸ், சென்ஸ் சப்போர்ட் , மாதம் ஒரு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்படுகின்றது.

ரூ.6000 விலை சலுகையில் க்ரியோ மார்க் 1  ஸ்மார்ட்போன் விலை ரூ.13,999

ப்ளிப்கார்ட் வழியாக சிறப்பு சலுகையாக ரூ.6000 தள்ளுபடியில் ரூ.13,999 விலையில் கிடைக்கும்.

ப்ளிப்கார்ட் தளத்தில் பார்க்க படத்தை க்ளிக் பன்னுங்க ;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here