இன்டெக்ஸ் அக்வா ஸ்மார்ட்போன் வரிசையில் புதிதாக இன்டெக்ஸ் அக்வா பவர் 4G ஸ்மார்ட்போன் ரூ.6,399 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
டிஸ்பிளே : 5 இன்ச் ஹெச்டி (1280 x 720) ஐபிஎஸ் டிஸ்பிளே
இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ
பிராசஸர் :1.1GHz மீடியாடெக் MT6735P 64 பிட் பிராசஸர்
ரேம் : 1 GB
கேமரா : 8 மெகாபிக்சல் பிளாஷ் கேமரா
முன் கேமரா: 2 மெகாபிக்சல் கேமரா
சேமிப்பு : 8 GB (MicroSD card upto 16 GB )
சிம் ; இரண்டு சிம்
பேட்டரி ; 3800 mAh
மற்றவை : 4G LTE , VoLTE , 3G HSPA+, WiFi 802.11 b/g/n, பூளூடூத் 4.0 மற்றும் ஜிபிஎஸ்
ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லா இயங்குதளத்தின் வாயிலாக செயல்படும் அக்வா பவர் 4ஜி மாடலில் 5 இன்ச் ஹெச்டி தொடுதிரையுடன் கூடிய 1.1 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் MT6735P 64 பிட் பிராசஸருடன் இணைந்த 1 ஜிபி ரேம் , 8 ஜிபி இன்ட்ர்னல் சேமிப்பு மற்றும் கூடுலாக 32 ஜிபி வரையிலான சேமிப்பு திறனை மைக்ரோஎஸ்டி கார்டு வழியாக பெறலாம்.
அக்வா பவர் 4G ஸ்மார்ட்போனில் 8 மெகாபிக்சல் ரியர் கேமரா எல்இடி பிளாஷ் கேமரா மற்றும் முன்புறத்தில் 2 மெகாபிக்சல் கேமரா பெற்று விளங்குகின்றது. சிறப்பான பேட்டரி பேக்கப் கிடைக்கும் வகையில் 3800 எம்ஏஹெச் பேட்டரியை பெற்றுள்ளது. 4G LTE , VoLTE , 3G HSPA+, WiFi 802.11 b/g/n, பூளூடூத் 4.0 மற்றும் ஜிபிஎஸ் போன்றவற்றின் ஆதரவினை பெறலாம்.
இன்டெக்ஸ் அக்வா பவர் 4G நுட்ப விபரங்கள்
இன்டெக்ஸ் அக்வா பவர் 4ஜி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் விற்பனை செய்யப்பட உள்ளது. இன்டெக்ஸ் மொபைல்களை பார்வையிட கீழுள்ள படத்தை க்ளிக் பன்னுங்க…