பட்ஜெட் ரகத்தில் புதிய லெனோவா வைப் கே5 ஸ்மார்ட்போன் ரூ.6,999 விலையில் விற்பனைக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் தளத்தின் வாயிலாக வருகின்ற ஜூன் 22ந் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளது.

ரூ.6,999 விலையில் லெனோவா வைப் கே5 விற்பனைக்கு அறிமுகம்

வருகின்ற திங்கள் கிழமை முதல் முன்பதிவு தொடங்கப்பட உள்ள நிலையில் வைப் கே 5 மொபைல் பற்றிய விபரங்களை தெரிந்துகொள்ளலாம். ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தில் 1.2GHz ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 415 பிராசஸருடன் 2GB ரேம் பெற்றுள்ளது.

5 இன்ச் ஹைச்டி டிஸ்பிளே திரையுடன் ( 720×1280 pixels ) கொண்டுள்ள லெனோவா வைப் K5 மொபைலில் 2750mAh பேட்டரியுடன் 16GB இன்ட்ர்னல் மெம்மரியுடன் 32GB மைக்ரோஎஸ்டி கார்டினை இணைத்து கொள்ள இயலும்.

Wi-Fi, GPS, Bluetooth, FM, 3G, 4G (இந்தியன் LTE மட்டும் ) போன்றவற்றை பெற்றுள்ள லெனோவோ வைப் கே 5 மொபைல் பட்ஜெட் விலையில் 13MP பிரைமரி கேமரா மற்றும் 5MP முன்பக்க கேமராவினை பெற்று கோல்டு , சில்வர் மற்றும் கிரே ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

ஃபிளாஷ் விற்பனை ; ஜூன் 22 முதல் பகல் 2 மணிக்கு தொடக்கம்

லெனோவா வைப் கே 5 வாங்க  கீழுள்ள படத்தினை க்ளீக் பன்னுங்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here