சீனாவை சேர்ந்த டிசிஎல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் டிசிஎல் 560 என்ற பெயரில் சிறப்பான வசதிகளை கொண்ட ஸ்மார்ட்போனை ரூ.7,999 விலையில் அறிமுகம் செய்துள்ளது. கண்ணின் கருவிழி ஸ்கேனர் வசதியை TCL 560 பெற்றுள்ளது.

தொடக்க நிலையில் சவாலான விலையுடன் ஐரீஸ் ஸ்கேனர் எனப்படும் கண்ணின் கருவிழி ஸ்கேனர் மூலம் ஸ்மார்ட்போனை அன்லாக் செய்யும் வசதியை டிசிஎல் 560 கொண்டுள்ளது. 5.5 இன்ச் ஹெச்டி (1280 × 720 pixels) ஃபுல் லேமினேசன் திரையுடன் 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 210 பிராசஸருடன் இணைந்த 2 ஜிபி ரேம் பெற்று ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லா இயங்குதளம் பெற்றுள்ளது.

டிசிஎல் 560 ஸ்மார்ட்போனில் 8 மெகாபிக்சல் பின்புற கேமராவில் ஆட்டோஃபோகஸ் எல்இடி ஃபிளாஷ் பெற்று விளங்குகின்றது. முன்புறத்தில் 5 மெகாபிக்சல் கேமரா  எல்இடி ஃபிளாஷ் பெற்றுள்ளது. 2500mAh பேட்டரி சேமிப்பினை பெற்றுள்ளது. 4G VoLTE , Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0 மற்றும் GPS போன்றவை இடம் பெற்றுள்ளது.

டிசிஎல் 560 நுட்பவிபரம்

 • திரை ; 5.5 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே (1280 × 720 pixels)
 • இயங்குதளம் ; ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ
 • பிராசஸர் ; 1.1 GHz குவால்காம் ஸ்னாப்டிராகன் 210
 • ரேம் ; 2 GB 
 • கேமரா ; 8 MP பிரைமரி கேமரா எல்இடி ஃபிளாஷ் 
 • முன்பக்க கேமரா ; 5 MP செல்ஃபீ கேமரா எல்இடி ஃபிளாஷ் 
 • சேமிப்பு ; 16 GB (MicroSD upto 64 GB) 
 • பேட்டரி; 2500mAh சிம் – இரு சிம் கார்டு ஸ்லாட்
 • மற்றவை ;  4G VoLTE ,3G, Bluetooth, WiFi, GPS, Infrared , iris scanner
 • விலை ; 7,999
 • போட்டியாளர்கள் ; லெனோவா வைப் கே5 ப்ளஸ், இன்டெக்ஸ் அக்வா ஷைன் 4ஜி ,லாவா X46 மற்றும் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் அமேஸ் 2 போன்றவை ஆகும்.
அமேசான் தளத்தின் வாயிலாக எக்ஸ்குளூசிவாக ஜூன் 5 ,2016 நள்ளிரவு 12 மணி முதல் விற்பனை தொடங்கப்படுகின்றது. 7 வாடிக்கையாளர்களுக்கு 100 % கேஸ்பேக் ஆஃபர் உள்ளது.
டிசிஎல் 560 ஸ்மார்ட்போன் வாங்க ;