இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 4 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஜனவரி 19 , 2017 யில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சியோமி எம்ஐ எக்ஸ்புளோர் சேலஞ்ச் பக்கத்தின் வாயிலாக பங்கேற்று ரெட்மி நோட் 4 மொபைலை இலவசமாக வெல்லாம்.

ரெட்மி நோட் 4 மொபைல் வருகை விபரம்

 

சியோமி வெளியிட்டுள்ள டிவிட்டரில் எம்ஐ எக்ஸ்புளோர்ஸ் பக்கத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரவுள்ள நோட் 4 மொபைலை வெல்ல இந்த பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள சர்வே கேள்விகளுக்கு விடை அளிப்பதன் மூலம் நீங்கள் வென்றிருந்தால் உங்களுக்கு நோட் 4 இலவசமாக கிடைக்கும்.

நோட் 4 நுட்ப விபரங்கள்

சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட அதே நுட்ப விபரங்களை கொண்ட மாடலாகவே விளங்கும் என எதிர்பார்க்கப்படும் நோட் 4 மாடலில் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லா இயங்குதளத்தை அடிப்பையாக கொண்ட எம்ஐயூஐ 8 இயங்குதளத்தில் இயங்கும். இதில் இரு சிம் கார்டு சிலாட் தேர்வுடன் 4ஜி VoLTE ஆப்ஷனில் கிடைக்கும்.

5.5 இன்ச் முழு ஹெச்டி திடையுடன்  (1080p) 2.5 D கிளாஸ் பொருத்தப்பட்ட மாடலாக இருக்கும். மேலும் சீனா சந்தையில் மீடியாடெக் பிராசஸர் பெற்றிருந்தாலும்  இந்திய மாடலில் ஸ்னாப்டிராகன் குவால்காம் 625 பெற்று 2ஜிபி ரேம் 16 ஜிபி இன்ட்ரனல் மெம்மரி , 3ஜிபி ரேம் 32 ஜிபி இன்ட்ரனல் மற்றும் 3ஜிபி ரேம் 64 ஜிபி இன்ட்ரனல் என மொத்தம் மூன்று வேரியன்ட்களாக கிடைக்கும். மேலும் கூடுதலாக 4ஜிபி ரேம் மாடலுடன் அதிகபட்ச மெம்மரி கொண்ட ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ரெட்மி நோட் 4 கேமரா விபரம்

மிகவும் உயர்தரமான படங்களை வெளிப்படுத்தும் 13 மெகாபிக்சல் ரியர் கேமராவில் எல்இடி பிளாஷ் ,  f/2.0 அப்ரேச்சர் , PDAF ஆதரவுடன் விளங்கும். முன்பக்க கேமரா 5 மெகாபிக்சல் பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரெட்மி நோட் 4 விலை ?

சியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் ஆரம்ப 2ஜிபி ரேம் மாடல் ரூ.12000 தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எக்ஸ்குளூசிவாக ஃபிளிப்காரட் வழியாக விற்பனை செய்யப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here