Xiaomi_Redmi_Note_7

இந்தியாவின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமி ரெட்மி நோட் 7 (Redmi note 7) முதல் நாள் ஃபிளாஷ் விற்பனையில் 2 லட்சத்துக்கும் கூடுதலான விற்பனையை ஒரு சில நிமிடங்களில் விற்றுள்ளதாக தனது டிவிட்டர் கணக்கில் சியோமி குறிப்பிட்டுள்ளது.

நேற்று முதன்முறையாக ரெட்மி நோட் 7 மொபைல் போன் 3 ஜிபி ரேம் 32 ஜிபி சேமிப்பை பெற்ற மாடல் 9,999 ரூபாய்க்கும், 4 ஜிபி ரேம் 64 ஜிபி சேமிப்பை பெற்ற மாடல் 11,999 ரூபாய் என இரு மாடல்களும் சியோமி மி.காம் மற்றும் ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வெளியிடப்பட்டது.

ரெட்மி நோட் 7 மொபைல் போன் சிறப்புகள்

Redmi note 7 போனில் 6.3-இன்ச் FHD+ வாட்டர் டிராப் டிஸ்பிளே 2340 ×1080 பிக்சல் தீர்மானத்தை கொண்டுள்ள இந்த போனை இயக்க ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் செயற்கை நுண்ணறிவு நுட்பத்துடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி அடுத்து 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி என இருவகைகளிலும் உள்ளது.

இந்த போனில் மிக விரைவாக சார்ஜிங் ஆகின்ற சார்ஜருடன் கூடிய 4000 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. கூடுதல் ஆதரவுகளாக கைரேகை சென்சார், 3.5mm ஆடியோ ஜாக், வை-ஃபை, ப்ளூடூத், 4ஜி எல்டிஇ , USB Type-C மற்றும் GPS + GLONASS போன்றவை கொண்டுள்ளது.

விற்பனைக்கு வந்த சில நிமிடங்களில் 2 லட்சம் இலக்கை கடந்துள்ளது. இதன் அடுத்த விற்பனை மார்ச் 13ந் தேதி நண்பகல் 12 மணிக்கு விற்பனைக்கு கிடைக்க உள்ளது. மி.காம் மற்றும் ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும்.