இந்தியாவின் லாவா மொபைல் தயாரிப்பாளரின் புதிய லாவா A82 மொபைல்போனில் 5 இஞ்ச் FWVGA டிஸ்பிளேவுடன் 1 ஜிபி ரேம் பெற்றுள்ள ஏ82 போன் விலை ரூ. 5,299 ஆகும்.

லாவா A82 மொபைல் விற்பனைக்கு அறிமுகம் - 1 GB ரேம்

பிரத்யேகமாக டாடா க்ளிக் ஆன்லைன் வழியாக விற்பனை செய்யப்பட உள்ள A82 ஸ்மார்ட் போன் விலை சலுகையுடன்  ரூ.4549 மட்டும் ஆகும். 1.2GHz குவாட்-கோர் மீடியாடெக் புராசெஸர் பெற்றுள்ள மொபைலில் 1 GB ரேம் பெற்றுள்ளது. 8 GB இன்டர்னல் சேமிப்பகத்துடன் 32 GB வரையிலான மைக்ரோஎஸ்டி கார்டினை பயன்படுத்தி கொள்ளலாம்.

ஆண்டராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தில் செயல்படும் ஏ82 மொபைலிலில் ஜிஎஸ்எம் , எட்ஜ் மற்றும் 3ஜி தொடர்புகளுடன் , மைக்ரோ யூஎஸ்பி , பூளூடூத் , வைஃபை போன்றவற்றை பெற்றுள்ளது.

144×72.7×9 அளவுகளை கொண்டுள்ள ஏ82 மொபைல் போனில் 2000 mAh பேட்டரி ஸ்டோரேஜ் பெற்று விளங்குகின்றது.   எல்இடி பிளாஸ் கொண்ட 5.0 மெகாபிக்ஸல் பின்புற கேமரா மற்றும் 3 மெகாபிக்ஸல் முன்பக்க கேமராவை பெற்றுள்ளது. வெள்ளை , கோல்டு மற்றும் பூளூ என மூன்று வண்ணங்களில் கிடைக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here