லாவா மொபைல் நிறுவனத்தின் லாவா எக்ஸ்17 4G ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.6,899 விலையில் வெளியிடப்பட்டுள்ளது.  லாவா X17 மொபைல் ஆண்ட்ராய்டு 6.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாகும்.

லாவா X17 4G ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது

5  இன்ச் ஐபிஎஸ் ஹெச்டி (1280 x 720 pixels) திரையுடன் , 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் பெற்று ஸ்பிரட்டிரம் SC9830 உடன் இனைந்த 1 ஜிபி ரேம் பெற்றுள்ளது. இதன் 8 ஜிபி இன்ட்ரனல் மெம்மரி மற்றும் கூடுதலாக 32ஜிபி மைக்ரோஎஸ்டி கார்டினை இணைத்துக்கொள்ள இயலும். ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லா இயங்குதளத்தினை அடிப்படையாக கொண்டு இயங்குகின்றது.

லாவா X17 ஸ்மார்ட்போனில் 8 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் டியூவல் எல்இடி பிளாஷ் கொண்ட மற்றும் 5 மெகாபிக்சல் முன்பக்க கேமராவில் டியூவல் எல்இடி பிளாஷ் பெற்றுள்ளது. சிறப்பான பேட்டரி பேக்கப் வழங்கும் 2350mAh பெற்றுள்ளது. 4G VoLTE, 3G, Wi-Fi 802.11 b/g/n, பன்பலை வானொலி, மைக்ரோயூஎஸபி 2.0, and GPS/ A-GPS போன்றவற்றை கொண்டுள்ளது.

பிளாக் கோல்டு , வெள்ளை கோல்டு , சாம்பியன் கோல்டு மற்றும் ஸ்டீல்கோல்டு ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here