லீ ஈகோ நிறுவனத்தின் லீ 2 மற்றும் லீ மேக்ஸ் 2 இரு மொபைல்களும் ஜூன் 28 முதல் ஃபிளாஷ் முறை விற்பனையில் ஃபிளிப்கார்ட் மற்றும் லீமால் இணையதளங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.  ஜூன் 20 முதல் முன்பதிவு தொடங்குகின்றது.

லீ ஈகோ லீ 2 மற்றும் லீ மேக்ஸ் 2  இன்று முதல் பிளாஷ் விற்பனை

லீ 2 (LeEco Le2)


புதிய லீ ஈகோ லீ 2 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்பிளேவுடன் (1920 x 1080 pixels) ஐபிஎஸ் கிளாசினை பெற்றுள்ளது. இதில் ஆக்டோ கோர் ஸ்நாப்டிராகன் 652 புராஸெசருடன் இணைந்த அட்ரெனோ 510 GPU சேர்ந்து 3GB LPDDR3 ரேமில் இயங்குகின்றது. 32GB இன்ட்ரனல் மெம்மரி வசதியை பெற்றுள்ளது. 

லீ ஈகோ லீ 2 மற்றும் லீ மேக்ஸ் 2  இன்று முதல் பிளாஷ் விற்பனை

லீ மேக்ஸ் 2 (LeEco LeMax 2)

லீ மேக்ஸ் 2 ஸ்மார்ட்போன் 5.7 இன்ச் குவாட் ஹெச்டி டிஸ்பிளேவினை கொண்ட மாடலில் 2.15GHz குவாட்-கோர் ஸ்நாப்டிராகன் 820 64-bit பிராஸெசருடன் இனைந்த Adreno 530 GPU சேர்ந்து 4GB மற்றும் 6GB என இருவிதமான ரேம் ஆப்ஷனில் லீ மேக்ஸ் 2 கிடைக்கும்.


லீ ஈகோ மொபைல் விலை பட்டியல்

LeEco Le 2 – Rs.11,999 

LeEco Le Max 2 – Rs.22,999 ( 4GB RAM)

LeEco Le Max 2 – Rs.29,999 ( 6GB RAM)

மொபைல் வாங்க ;


லீ 2 மொபைல் மதியம் 12 மணிக்கும் லீ மேக்ஸ் 2 மதியம் 2 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு ஜூன் 20 முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் தற்பொழுது 5.25 லட்சம் முன்பதிவுகளை பெற்றுள்ளதாக லீ ஈகோ உறுதிப்படுத்தியுள்ளது.

லீ ஈகோ லீ 2 மற்றும் லீ மேக்ஸ் 2  இன்று முதல் பிளாஷ் விற்பனை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here