சீனாவின் லீ ஈகோ நிறுவனம் மொபைல்போன் விற்பனையில் தொடர்ந்த புரட்சி செய்து வருகின்றது. அந்த வரிசை புதிய  லீ ஈகோ லீ 2 , லீ மேக்ஸ் 2 என இரண்டு சூப்பர்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

நேற்று டெல்லியில் நடைபெற்ற 2Future நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள லீ ஈகோ லீ 2  மொபைல் விலை ரூ.11,999 மற்றும் லீ மேக்ஸ் 2 மொபைல் விலை ரூ.22,999 ஆகும். இரு மொபைல்களுமே ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தில் இயங்குகின்றது. மேலும் 4G LTE, WiFi 802.11 ac/a/b/g/n (2.4/5 GHz), பூளூடுத் 4.1, GPS மற்றும் யூஎஸ்பி Type C போன்றவற்றுடன் CDLA (Continual Digital Lossless Audio) எனப்படும் தெளிவான ஆடியோவினை பெறலாம்.

லீ ஈகோ லீ 2

புதிய லீ ஈகோ லீ 2 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்பிளேவுடன் (1920 x 1080 pixels) ஐபிஎஸ் கிளாசினை பெற்றுள்ளது. இதில் ஆக்டோ கோர் ஸ்நாப்டிராகன் 652 புராஸெசருடன் இணைந்த அட்ரெனோ 510 GPU சேர்ந்து 3GB LPDDR3 ரேமில் இயங்குகின்றது. 32GB இன்ட்ரனல் மெம்மரி வசதியை பெற்றுள்ளது. 
இந்தியாவின் அனைத்து 4G LTE அலைவரிசையிலும் இயங்கும் மேலும் 16 மெகாபிக்ஸல் ரியர் கேமரா சிறப்பான படத்தினை வழங்கும் வகையில் டியூவல் எல்இடி ஃபிளாஷ் ,  f/2.0 aperture மற்றும் PDAF (phase detection autofocus) போன்றவற்றை பெற்றுள்ளது. முன்புறத்தில் 8 மெகாபிக்ஸல் கேமராவினை பெற்றிருக்கும். 3000mAh பேட்டரியுடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை பெறலாம்
டால்பி ஆட்ம்ஸ் சிஸ்டம் , ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர் , இன்ஃபிராரெட் சென்சார் போன்வற்றை பெற்றுள்ளது. விரைவில் இந்தியாவில் ஃபிளிப்கார்ட் மற்றும் லீமால் இணையங்களில் கிடைக்க உள்ளது.
லீ ஈகோ லீ 2 விலை
LeEco Le 2 – Rs.11,999 

லீ ஈகோ லீ மேக்ஸ் 2

இந்தியாவின் முதல் 6GB ரேம் கொண்ட மாடலாக வந்துள்ள லீ மேக்ஸ் 2 மொபைல் வருகின்ற ஜூன் 20 முதல் ஃபிளிப்கார்ட் வழியாக முன்பதிவு  செய்து கொண்டு வருகின்ற ஜூன் 28 முதல் ஃபிளாஷ் விற்பனை தொடங்குகின்றது.
லீ மேக்ஸ் 2 ஸ்மார்ட்போன் 5.7 இன்ச் குவாட் ஹெச்டி டிஸ்பிளேவினை கொண்ட மாடலில் 2.15GHz குவாட்-கோர் ஸ்நாப்டிராகன் 820 64-bit பிராஸெசருடன் இனைந்த Adreno 530 GPU சேர்ந்து 4GB மற்றும் 6GB என இருவிதமான ரேம் ஆப்ஷனில் லீ மேக்ஸ் 2 கிடைக்கும்.
4GB மாடலில் 32GB இன்ட்ரனல் ஸ்டோரேஜ் மற்றும் 6GB மாடலில் 64GB இன்ட்ரனல் ஸ்டோரேஜ் பெறும் வகையில் உள்ள லீ மேக்ஸ் 2 மொபைலில் டியூவல் எல்இடி ஃபிளாஷ் ,  f/2.0 aperture , Sony IMX230 சென்சார் ,  OIS, 6P லென்சஸ் மற்றும் PDAF (phase detection autofocus) போன்றவற்றை கொண்டு மிக நேர்த்தியான படங்களை வழங்கவல்ல 21 மெகாபிக்ஸல் ரியர்கேமராவினை பெற்றுள்ளது. முன்புறத்தில் 8 மெகாபிக்ஸல் கேமராவினை பெற்றிருக்கும். 
3100mAh பேட்டரியுடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை பெறலாம்
லீ ஈகோ லீ மேக்ஸ் 2 விலை விபரம்
  • LeEco Le Max 2 – Rs.22,999 ( 4GB RAM)
  • LeEco Le Max 2 – Rs.29,999 ( 6GB RAM)
மேலும் ரூ.1 லீ ஈகோ லீ 2 மொபைல் 300 நபர்களுக்கு லீமால் இணையத்தில் கிடைக்க உள்ளது.  இதுகுறித்து விரைவில் அறிவிப்பினை வெளியிட  லீ ஈகோ உள்ளதால் இணைந்திருங்கள் கேட்ஜெட்ஸ் தமிழன் இணையதளத்துடன்…

லீ 1 எஸ் ஈகோ வாங்க ;