வருகின்ற ஜனவரி 31 ,2017 முதல் புதிய மேம்படுத்தப்பட்ட லெனோவா கே6 பவர் ஸ்மார்ட்போன் ரூ. 9,999 விலையில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. ஃப்ளிப்கார்ட் வழியாக எக்ஸ்குளூசிவாக கிடைக்க உள்ளது.
ஜனவரி 31 , 2017 பகல் 12 மணி முதல் எக்ஸ்குளூசிவாக ஃபிளிப்கார்டில் விற்பனை செய்யப்பட உள்ள கே6 பவர் ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம், 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு மற்றும் 4ஜிபி ரேம், 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வகையிலும் கிடைக்க உள்ளது.
லெனோவா கே6 பவர்
லெனோவா கே6 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மெல்லோ இயங்குதநளத்தை அடிப்படையாக கொண்ட லெனோவா வைப் வழியாக இயங்குகின்ற கே6 பவரில் 5.5 அங்குல முழு ஹெச்டி திடையுடன் 1080×1920 பிக்சல்கள் கொண்டுள்ளது. கே6 பவரில் Adreno 505 ஜிபியூ மற்றும் 1.4GHz அக்டா கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 430 ப்ராசசர் மூலம் 3ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ரேம் போன்றவற்றில் கிடைக்கின்றது.
லெனோவா கே6 பவர் ஸ்மார்ட்போனில் எல்இடி ஃபிளாஷ் , சோனி IMX258 சென்சார் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மைக்ரோ எஸ்டி கார்டு , Wi-Fi 802.11 b/g/n, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத் 4.1, USB OTG, 3.5மிமீ ஆடியோ ஜாக், ஜிஎஸ்எம், 3ஜி, 4ஜி VoLTE மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை கொண்டுள்ளது.
லெனோவா K6 பவர் விலை
3GB ரேம் 32GB சேமிப்பு – ரூ. 9,999
4GB ரேம் 32GB சேமிப்பு – ரூ. 10,999