லெனோவா நிறுவனத்தின் லெனோவா வைப் கே5 ஸ்மார்ட்போன் ரூ.6999 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இரு ஃபிளாஷ் விற்பனையில் 1 லட்சம் வைப் கே5 மொபைல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெனோவா வைப் கே5 தொடர் விற்பனை ஜூலை 4 முதல்

4ஜி தொடர்புடன் கூடிய 2ஜிபி ரேம் பெற்றுள்ள லெனோவா வைப் கே5 ஸ்மார்ட்போனில் 5.1 லாலிபாப் ஆண்ட்ராய்டு இயங்குதளத்த்துடன் செயல்படுகின்றது. மிக சிறப்பான வசதிகளுடன் சவாலான விலையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

 லெனோவா வைப் கே5 நுட்ப விபரங்கள்

  • திரை ; 5 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே (720×1280 pixels)
  • இயங்குதளம் ; ஆண்ட்ராய்டு  5.1 லாலிபாப் 
  • பிராசஸர் ; 1.2GHz ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 415 soc
  • ரேம் ; 2GB
  • கேமரா ; 13MP பிரைமரி கேமரா
  • முன்பக்க கேமரா ; 5MP செல்ஃபீ கேமரா
  • சேமிப்பு ; 16GB (MicroSD upto 32GB)
  • பேட்டரி; 2750mAh
  • விலை ; 6,999

அமேசான் தளத்தின் வாயிலாக எக்ஸ்குளூசிவாக விற்பனை செய்யப்பட்டு வரும் லெனோவா வைப் K5 மொபைலில் Wi-Fi, GPS, Bluetooth, FM, 3G மற்றும் 4G போன்றவை பெற்றுள்ளது.  இரு ஃபிளாஷ் விற்பனை நிறைவுற்ற நிலையில் 1,00,000 மொபைல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக லெனோவா தெரிவித்துள்ளது. தொடர் விற்பனை எக்ஸ்குளூசிவாக அமேசான் வாயிலாக ஜூலை 4 முதல் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here