ரூ.11,999 விலையில் லெனோவா வைப் கே5 நோட் ஸ்மார்ட்போன் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது. கருப்பு , சில்வர் மற்றும் கோல்டு என மூன்று நிறங்களில் லெனோவா வைப் கே5 நோட்  வெளிவந்துள்ளது.

லெனோவா வைப் கே5 நோட் ஸ்மார்ட்போன் வாங்கலாமா ?

இன்று இரவு 11.59 மணிக்கு பிளிப்கார்ட் வழியாக எக்ஸ்குளூசிவாக விற்பனைக்கு வரவுள்ள நிலையில் வைப் கே5 நோட் ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ரேம் என இரு வேரியண்ட்களில் கிடைக்கின்றது.

5.5 இன்ச் முழுமையான ஹெச்டி 1080p ஐபிஎஸ் டிஸ்பிளே திரையுடன் கூடிய 64 பிட் ஆக்டோகோர் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ பி10 6755 பிராசஸருடன் இணைந்த 3ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ரேம் ஆப்ஷன்களில் 32ஜிபி வரையில் இன்ட்ர்னல் சேமிப்பு திறனை பெற்று 128ஜிபிவரையில் மைக்ரோ எஸ்டி கார்டினை பயன்படுத்திக கொள்ளலாம்.

டால்பி டிஜிட்டலுடன் இணைந்து மிக தெளிவான ஆடியோ தரத்தை வெளிப்படுத்தும் வகையில் Wolfson WM8281 ஆடியோ கோடக் இனைந்து மிக தெளிவான ஆடியோவை வெளிப்படுத்தும்.

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லா இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட செயல்படும் தெள்ள தெளிவான 13 மெகாபிக்சல் டியூவல் எல்இடி பிளாஷ் உடன் இணைந்த ஆட்டோஃபோகஸ் பிடிஏஎஃப் கேமரா பெற்று விளங்குகின்றது. 8 மெகாபிக்சல் 77 டிகிரி வைட் கோண வடிவில் படங்களை எடுக்க இயலும்.

இரு சிம் கார்டுகளை பெற்று இயங்கும் 4ஜி , 3ஜி ,2ஜி ஆதரவுகளுடன் இயங்குகின்றது. செக்கியூர் ஜோன் என்ப்படும் ஆப்ஷனில் வாட்ஸ்ஆப் முதல் வீசாட் வரை செயல்படுத்த முடியும். மேலும் படங்கள் , வீடியோ என அனைத்தும் பாதுகாப்பு அம்சத்தில் வைத்துக்கொள்ளலாம்.

லெனோவா வைப் கே5 நோட் ஸ்மார்ட்போன் வாங்கலாமா ?

தியேட்டர்மேக்ஸ் வழியாக சிறப்பான முறையில் தெளிவான படங்களை ANTVR வழியாக லெனோவா விர்ச்சூவல் ரியாலிட்டி வழியாக கானலாம். 3500mAh பேட்டரி நாள் முழுமைக்கு தாங்கும் வகையில் அமைந்துள்ளது.

லெனோவா வைப் கே5 ஸ்மார்ட்போன் விலை

லெனோவா வைப் கே5 3ஜிபி ரேம் ; ரூ.11,999

லெனோவா வைப் கே5 4ஜிபி ரேம் ; ரூ.13,499

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here