4ஜி ஆதரவு கொண்ட குறைந்த விலையில் லெனோவா வைப் பி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடக்க நிலை சந்தைக்கு ஏற்ற மாடலாக விளங்கும் லெனோவா வைப் B விலை ரூ.5799 மட்டுமே.
லெனோவா வைப் B
தொடக்க நிலை சந்தைக்கு ஏற்ற லெனோவா பி மாடல் 4ஜி எல்டிஇ ஆதரவு கொண்ட ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ 6.0 இயங்குதளத்தில் செயல்பட கூடிய குவாட்கோர் 64 பிட் மீடியாடெக் 6735m பிராசஸருடன் இணைந்த 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பினை பெற்று விளங்குகின்றது. மேலும் மைக்ரோ எஸ்டிகார்டு வழியாக 32 ஜிபிவரை மெமரி அதிகரிக்கலாம்.
சிங்கிள் எல்இடி ஃபிளாஷ் ஆப்ஷனுடன் விளங்குகின்ற பிரைமரி கேமரா 5 மெகாபிக்சலை பெற்றுள்ளது. செல்ஃபி படங்களுக்கு ஏற்ற வகையில் 2 மெகாபிக்சல் கேமாரா உள்ளது.
அதிகார்வப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படாமல் உள்ள லெனோவா வைப் B விலை ரூ. 5,799 என மகேஸ் டெலிகாம் தெரிவித்துள்ளது.
லெனோவா வைப் B நுட்ப விபரம்
- திரை: 4.5 அங்குல FWVGA திரையுடன் தரத்துடன் 480 x 854 பிக்சல் தீர்மானம்
- பிரைமரி கேமரா: 5 MP பிரைமரி கேமரா ஃபிக்சஸ்டு ஃபோகஸ் வசதியுடன் எல்ஈடி ஃபிளாஷ் பெற்றுள்ளது.
- செல்ஃபீ கேமரா: 2 MP பிரைமரி கேமரா பெற்றுள்ளது.
- Storage & RAM: 1GB ரேம் உள்ள மாடலில் 8 ஜிபி இன்டர்னல் மெமரி பெற்றுள்ளது. கூடுதல் சேமிப்புக்கு மைக்ரோ எஸ்டிகார்டு வழியாக 32 ஜிபிவரை மெமரி அதிகரிக்கலாம்.
- பிராசஸர்: குவாட்கோர் 64-bit மீடியாடெக் 6735m பிராசஸர் பெற்றுள்ளது.
- ஒஎஸ்: மார்ஷ்மெல்லோ 6.0
- அலைவரிசை: டுயல் சிம் & 4G VoLTE
- பேட்டரி: 2500 mAh
- ஆதரவு: ப்ளூடூத் 4.0 , மைக்ரோ USB போர்ட் மற்றும் Wifi b/g/n
- ப்ரி லோடேட் – ஸ்கைப், டிவிட்டர், எவர்நோட், UC பிரவுசர் மேலும் பல