உலகின் விலை மலிவான ஸ்மார்ட்போன் என்ற பெயரில் விற்பனைக்கு வந்த ஃபிரீடம் 251 மொபைல் தொடர்ச்சியாக டெலிவரி தேதி தள்ளிப்போட படுவதனால் மக்களுக்கு டெலிவரி ஆகுமா ஆகாதா ? என்ற எண்ணம் எழுந்துள்ளது.

வரும் ... ஆனா வராது ... ஃபிரீடம் 251 டெலிவரி ஜூலை 6 முதல்....

கடந்த பிப்ரவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஃபிரீடம்251 மொபைல் இந்திய மக்களின் ஆர்வத்தினை தூண்டியதனால் மூன்று நாட்களில் 7 கோடி மொபைல்கள் முன்பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.  ஜூன் 30க்குள் 25 லட்சம் மொபைல்கள் டெலிவரி செய்யப்படும் என்ற நிலையில் கடந்த வாரம் ஜூன் 28 டெலிவரி தொடங்கும் 2 லட்சம் மொபைல்கள் தயார் என்று அறிவித்தனர். அடுத்து ஜூன் 30 என்றனர் . நேற்று மீண்டும் டெலிவரி தேதி ஜூலை 6ந் தேதி என மாற்றியுள்ளனர்.

பிரீடம் 251 மொபைல் நுட்பவிபரம்
  • டிஸ்பிளே ; 4 இன்ச் டிஸ்பிளே
  • பிராசஸர் ; 1.3GHz குவாட் கோர் பிராசஸர்
  • இயங்குதளம் ; ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் 
  • ரேம் ; 1GB ரேம்
  • கேமரா; 8 மெகாபிக்சல் கேமரா
  • முன்பக்க கேமரா ; 3.2 மெகாபிக்சல் கேமரா
  • சேமிப்பு ; 8GB (MicroSD upto 32GB)
  • பேட்டரி ; 1800mAh
  • விலை ;251
வரும் ... ஆனா வராது ... ஃபிரீடம் 251 டெலிவரி ஜூலை 6 முதல்....வருகின்ற 7ந் தேதி ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் புதிய மொபைல்கள் மற்றும் 32 இன்ச் எல்இடி தொலைக்காட்சி போன்றவற்றை விற்பனைக்கு கொண்டு வரவாய்ப்புகள் உள்ளது.

தருவாங்களா ? உங்கள் கருத்து என்ன மறக்காமல் கமெண்ட்ஸ் பன்னுங்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here