விவோ V9 ஸ்மார்ட்போன் பற்றி அறிந்துகொள்ளுங்கள்

உயர்ரக ஆப்பிள் ஐபோன் X மொபைல் போனின் தோற்ற உந்துதலை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள சீனாவின் விவோ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் , விவோ V9 ஸ்மார்ட்போன் ரூ. 22,990 விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விவோ V9 ஸ்மார்ட்போன்

விவோ V9 ஸ்மார்ட்போன் பற்றி அறிந்துகொள்ளுங்கள்

அதிகம் விலை கொண்டு , பல்வேறு அம்சங்களை பெற்ற உயர் ரக ஸ்மார்ட்போன் மாடலாக விளங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் ஐபோன் X என்ற மொபைல் போனின் தோற்ற உந்துதலை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ள விவோ வி9 (Vivo V9) மொபைல் போன் , ஏப்ரல் 2, 2018 முதல் சந்தையில் கிடைக்க உள்ளது. இந்நிலையில் தற்போது ஃபிளிப்காரட், விவோ இணையதளத்தில் முன்பதிவு வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரீடெயிலர்களிடம் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

6.3 அங்குல முழு எச்டி+ டிஸ்பிளே 2280 x 1080 பிக்சல்கள் கொண்ட தீர்மானத்துடன் 19: 9 என்கிற திரை விகிதம் பெற்று மிக குறைந்த பெசல் பெற்றதாக முழுமையான திரையுடன் காட்சியளிக்கின்றது. கருப்பு, நீலம் மற்றும் கோல்டு ஆகிய மூன்று நிறங்களை பெற்றதாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

வி9 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 626 சிப்செட் மூலம் இயக்கப்படுகின்ற 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி அளவிலான உள்ளீட்டு சேமிப்புடன் இணைந்துள்ளது. சேமிப்பு விரிவாக்கத்திற்கான 256GB மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் வழங்கப்படுகின்றது. மிக நேர்த்தியான வடிவமைப்பினை பெற்று விளங்கும் இந்த மொபைல் போனில் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை பின்பற்றி உருவாக்கப்பட்ட விவோ நிறுவனத்தின் ஃபன்டச் ஓஎஸ் 4.0 இடம்பெற்றுள்ளது.

3,260mAh பேட்டரி கொண்டு இயங்குகின்ற வி9 போனில் முகப்பில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு  f/2.0 துளை மற்றும் செயற்கை நுண்ணறிவு முறையில் அழகுப்படுத்தும் அம்சம் கொண்ட 24 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது. பின்புறத்தில், ஒரு 16 மெகாபிக்சல் சென்சார் மற்றும் ஒரு 5 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் என்கிற இரட்டை கேமரா அமைப்பு வழங்குகிறது.

V9 மொபைல் போன் 150 கிராம் எடையை பெற்று துனைஆதரவுகளான 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ், USB, OTG மற்றும் கைரேகை சென்சார் ஆகியவற்றை கொண்டுள்ளது.

விவோ V9 ஸ்மார்ட்போன் விலை ரூ. 22,990