வீடியோகான் கிரிப்டான் 22 மொபைல் விற்பனைக்கு வெளியானது

இந்தியாவின் வீடியோகான் நிறுவனம் புதிதாக ரூ.7200 விலையில் வோல்ட்இ ஆதரவு கொண்ட வீடியோகான் கிரிப்டான் 22 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வீடியோகான் கிரிப்டான் 22

  • கிரிப்டான் 22 ஸ்மார்ட்போனில் வோவைபை வசதி மற்றும் ஐஆர் பிளாஸ்டர் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
  • 5 அங்குல எல்சிடி டிஸ்பிளே பெற்றதாக வந்துள்ளது.
  • ஆண்ட்ராய்டு நௌகட் 7.0 இயங்குதளத்தில் செயல்படுகின்றது.

இந்தியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வீடியோகானின் பட்ஜெட் விலையில் சிறப்பான வசதிகளை பெற்ற வீடியோகான் க்ரிப்டான் 22 ஸ்மார்ட்போனில் 5 இன்ச் எல்சிடி எச்டி டிஸ்பிளே பெற்றிருப்பதுடன் 1.1GHz குவாட்கோர் பிராசஸர் உடன் இணைந்து செயல்படுகின்ற 2GB ரேம் பெற்று 16ஜிபி வரையிலான உள்ளடங்கிய சேமிப்பு வசதியை வழங்கியுள்ளது. கூடுதலாக மெமரி வசதியை நீட்டிக்க விரும்பினால் மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 64ஜிபி வரை அதிகரிக்கும் வகையிலான வசதி வழங்கப்பட்டுள்ளது.

கேமரா

பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள 8 எம்பி கேமராவில் இரு டோன் பெற்ற எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபீ படங்கள் மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முன்புறத்தில் எல்இடி பிளாஷ் வசதியுடன் கூடிய 5 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

மற்றவை

இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு சிறப்பு துனை விருப்பங்களை வீடியோகான் வழங்கியுள்ளது. குறிப்பாக அவசர கால எஸ்ஓஎஸ் பட்டன் வசதி, ரிமோட் கன்ட்ரோல் ஐஆர் பிளாஸ்டர்,  ஒரு வருடத்திற்கான யூரோஸ் நவ் மற்றும் கேம்லோஃப்ட் சப்ஸ்கிரைப் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் 4G எல்டிஇ, வோல்டிஇ, VoWiFi (Voice over wifi), வை-பை, புளூடூத், யூஎஸ்பி ஓடிஜி மற்றும் ஜிபிஎஸ் போன்ற வசதிகளும் உள்ளன.

விலை

ரூபாய் 7200 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வீடியோகான் கிரிப்டான் 22 ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டிலும் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You