இந்தியாவின் ஸ்வைப் டெக்னாஜிஸ் நிறுவனத்தின் ஸ்வைப் எலைட் ப்ளஸ் 5 இஞ்ச் ஹெச்டி டிஸ்பிளே கொண்ட மாடலாக ரூ. 6,999 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்வைப் எலைட் ப்ளஸ் மொபைல்போன் விற்பனைக்கு அறிமுகம்

வருகின்ற ஜூன் 6 , 2016 முதல் எஸ்குளூசிவாக ஃபிளிப்கார்ட் இணையத்தின் வாயிலாக விற்பனைக்கு கிடைக்க உள்ள எலைட் ப்ளஸ் மொபைலில் 4G LTE  தொடர்புடன்  எல்இடி ஃபிளாஸூடன் கூடிய 13 மெகாபிக்சல் ரியர் கேமரா மற்றும் 5 மெகாபிக்ஸல் ஃபிரென்ட் கேமராவினை பெற்றுள்ளது.

1.5GHz ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் புராஸெசருடன் 2 GB ரேம் மற்றும் 16 GB இன்டரனல் மெம்ரி பெற்று விளங்குகின்றது. இதன் எக்ஸ்ட்ரனல் மைக்ரோ எஸ்டி மெம்ரி 64 GB வரை பயன்படுத்த இயலும்.

4G LTE , 3G , 3G, GPRS/ EDGE, GPS , வை-ஃபை , பூளூடூத் மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போன்றவற்றை பெற்றுள்ள ஸ்வைப் எலைட் ப்ளஸ் மொபைலில் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தினை அடிப்படையாக கொண்ட ஃபீரிடம் கஸ்டம் ஓஎஸ் பெற்றுள்ளது.

எலைட் ப்ளஸ் மொபைல் மிட்நைட் பூளூ மற்றும் ஐவரி வெள்ளை ஆகிய வண்ணங்களில் எக்ஸ்குளூசிவாக ஃபிளப்கார்டில் வரும் திங்கள் கிழமை முதல் கிடைக்கும்.

ஸ்வைப் எலைட் ப்ளஸ் எஸ்குளூசிவாக வாங்க ;  ஸ்வைப் எலைட் ப்ளஸ் மொபைல்போன் விற்பனைக்கு அறிமுகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here