வருகின்ற பிப்ரவரி 26ந் பார்சிலோனாவில் நடைபெற இருக்கும் 2017 மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட உள்ள ஹூவாய் P10 மொபைல் மாடலின் அதிகார்வப்பூர்வ பத்திரிக்கை படங்கள் வெளியானது.

ஹூவாய் P10 மொபைல் படங்கள் வெளியானது #MWC2017

ஹூவாய் P10 மொபைல்

பி10 மொபைல்முன்பக்கத்தில் அமைந்துள்ள ஹோம் பட்டனில் கைரேகை ஸ்கேனர் , மிகவும் தட்டையான திரையுடன் வெளிவந்துள்ள படத்தின் பின்புறத்தில் டூயல் கேமரா எல்இடி ஃபிளாஷ் அமைப்புடன் பவர்ட் பை லீசியா என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மொபைலின் வலது பக்க அமைப்பில் வால்யூம் பொத்தம் , பவர் ஆன்/ஆஃப் பொத்தான்கள் உள்ளது.

ஹூவாய் பி10 கருவியில் 5.5 ஃபிளாட் திரையுடன் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தில் செயல்படும்  Kirin 960 சிப்செட்களுடன் இணைந்த மூன்று விதமான ரேம் தேர்வுகளில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அவை 4GB ரேம் உடன் 32GB வரையிலான உள்ளடங்கிய சேமிப்பு  4GB உடன் 64GB வரையிலான உள்ளடங்கிய சேமிப்பு மற்றும் 6GB உடன் 128GB வரையிலான உள்ளடங்கிய சேமிப்பினை பெற்றிருக்கலாம்.

ஹூவாய் பி10 விலை விபரம் (தோராயமாக)

4GB/32GB – RMB 3,488 (ரூ 34,100)

4GB/64GB – RMB 4,088 (ரூ 40,000 )

6GB/128GB – RMB 4,688 (ரூ 45,900)

முழுமையான விபரங்கள் இணைந்திருங்கள் கேட்ஜெட்ஸ் தமிழன் தளத்துடன்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here