பிப்ரவரி 26ந் பார்சிலோனாவில் நடைபெற்ற 2017 மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஹூவாய் P10, ஹூவாய் P10 பிளஸ்  மொபைல் விபரங்களை காணலாம்.

ஹூவாய் P10 , P10 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் #MWC17

ஹூவாய் P10 மற்றும் ஹூவாய் P10 பிளஸ்

இரு கருவிகளிலும் இடம்பெற்றுள்ள முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றான ஸ்கிராட்ச் ,கைவிரல் கீறல்கள் போன்றவற்றை தடுக்கும் வகையிலான  Hyper Diamond-cut மெட்டல் பாடியுடன் வந்துள்ள இக்கருவி கைநழுவாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூவாய் P10

பி10 மொபைல் முன்பக்கத்தில் அமைந்துள்ள ஹோம் பட்டனில் கைரேகை ஸ்கேனர் , மிகவும் தட்டையான திரையுடன் வெளிவந்துள்ள படத்தின் பின்புறத்தில் டூயல் கேமரா எல்இடி ஃபிளாஷ் அமைப்புடன் பவர்ட் பை லீசியா என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மொபைலின் வலது பக்க அமைப்பில் வால்யூம் பொத்தம் , பவர் ஆன்/ஆஃப் பொத்தான்கள் உள்ளது.

ஹூவாய் பி10 கருவியில் 5.1 ஃபிளாட் திரையுடன் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தில் செயல்படும்  Kirin 960 சிப்செட்களுடன் இணைந்த மூன்று விதமான ரேம் தேர்வுகளில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அவை 4GB ரேம் உடன் 32GB வரையிலான உள்ளடங்கிய சேமிப்பு  128GB வரையிலான உள்ளடங்கிய சேமிப்பினை பெற்றிருக்கலாம்.

ஹூவாய் P10 , P10 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் #MWC17

ஹூவாய் P10 பிளஸ்

ஹூவாய் பி10 பிளஸ் கருவியில் 5.5 ஃபிளாட் திரையுடன் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தில் செயல்படும்  Kirin 960 சிப்செட்களுடன் இணைந்த மூன்று விதமான ரேம் தேர்வுகளில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அவை  4GB உடன் 64GB வரையிலான உள்ளடங்கிய சேமிப்பு மற்றும் 6GB உடன் 128GB வரையிலான உள்ளடங்கிய சேமிப்பினை பெற்றுள்ளது.

போட்டோ

லீசியா பிராண்டின் பெயரில் வந்துள்ள கேமரா அட்டகாசமாக படங்கள் மற்றும் வீடியோவினை எடுக்க பெரிதும் உதவும்.

P10 ,  P10 பிளஸ் ஸ்மார்ட்போன் கருவிகளில்  20 மெகாபிக்சல் மோனோக்ரோம் மற்றும் 12 மெகாபிக்சல் RGB சென்சார்களை பெற்ற கேமரா இடம்பெற்றுள்ளது. ஹூவாய் P10 மொபைலில் f/2.2 aperture மற்றும் P10 பிளஸ் கருவியில் f/1.8 aperture. மேலும் ஹூவாய் ஹைபிரிட் ஜீம் (2x),  4-in-1 ஹைபிரிட் ஆட்டோ ஃபோகஸ், மற்றும் இயற்கை சார்ந்த எஃபக்ட் வெளிப்படுத்தும்.

P10 மற்றும் P10 Plus  கருவிகளில் இடம்பெற்றுள்ள புரோ மோட் வழியாக ISO மற்றும் ஷட்டர் ஸ்பீடு போன்றவை உள்ளன. 4கே வீடியோ பதிவு வசதியுடன் பல்வேறு சிறப்பு வசதிகளை பெற்றுள்ளன.

இருகருவியிலும் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்று சிறப்பான செல்ஃபீ படங்களை எடுக்கும் வகையில் 3டி முறையில் முகத்தை அறியும் அமைப்பினை பெற்றுள்ளது.

பேட்டரி

பி10 கருவியில் 3,200mAh மற்றும் பி10 பிளஸ் மாடலில் 3,750mAh திறனை கொண்டு மிக வேகமாக சார்ஜ் ஏறும் முறையுடன் வந்துள்ளது.

மற்றவை

ஆண்ட்ராய்டு 7.1 இங்குதளத்தை அடிப்படையாக கொண்ட  இரு மொபைல்களிலும்  டூயல் சிம் சப்போர்ட், வைஃபை 802.11a/b/g/nac, யூஎஸ்பி டைப்-C துனை, மற்றும் புளூடூத் 4.2 போன்றவை இடம்பெற்றுள்ளது.

Dazzling Gold, Prestige Gold, Ceramic White, Rose Gold, Graphite Black, Mystique Silver, Greenery மற்றும் Dazzling Blue என மொத்தம் 8 வண்ணங்களில் கிடைக்க உள்ளது.

ஹூவாய் பி10 , பி10 பிளஸ் விலை

  • ஹூவாய் பி10 விலை ரூ.45,800 (தோராயமாக)
  • ஹூவாய் பி10 பிளஸ் விலை ரூ.49,500 (தோராயமாக)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here