ஹெச்டிசி ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் ஹெச்டிசி டிசையர் 630 ஸ்மார்ட்போன்  விலை ரூ. 14,990 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

ஹெச்டிசி டிசையர் 630 ஸ்மார்ட்போன் விலை விபரம் வெளியானது

ஹெச்டிசி டிசையர் 630  மொபைல்  5 இன்ச் ஹெச்டி சூப்பர் எல்சிடி திரையுடன் 1.6GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 400 பிராசஸர் பெற்று 2GB ரேம் கொண்டு இயங்குகின்றது. 16 GB மொபைல் சேமிப்பு திறனுடன் 2TB (256GB) மைக்ரோஎஸ்டி கார்டு உடன் இயங்குகின்றது.

இரு சிம் கார்டுகளுடன் மிகசிறப்பான படங்களை வழங்கவல்ல 13MP லேசர்  ஆட்டோஃபோகஸ் ,  டியூவல் எல்இடி ஃபிளாஷ்  மற்றும் ஆப்டிக்கல் இமேஜ் ஆப்ட்டிசைஸன் கொண்டதாக விளங்கும். முன்பக்கத்தில் 5MP கேமரா பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லா இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட ஹெச்டிசி சென்ஸ் இயங்குதளத்தில் செயல்படும் ஹெச்டிசி டிசையர் 630 ஸ்மார்ட்போனில் GPRS/ EDGE, Bluetooth 4.1, 3G, Wi-Fi 802.11 b/g/n, GPS/ A-GPS, 4G, மற்றும் Micro-USB போன்றவற்றுடன் 2200mAh பேட்டரியை பெற்றுள்ளது.

பூம்சவூண்ட் டால்பி ஆடியோ ஸ்பீக்கர் பெற்றுள்ள டிசையர் 630 மொபைல்போன் பாக்சில் 24-bit hi-res HTC Extreme Fidelity இயர்போன் லேன்யார்டு மற்றும் இரண்டு ஸ்நாப் கேஸ் இலவசமாக கிடைக்கும். வெள்ளை மற்றும் கிரே வண்ணங்களில் கிடைக்கும். ஹெச்டிசி நிறுவனத்தின் அலுவல் இணையதளத்தின் வாயிலாக விற்பனைக்கு வந்துள்ளது. http://estore.htc.com/in/

Snapdeal Exculsive offers today only

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here