இந்தியாவில் பல்வேறு சிறப்பு வசதிகளை கொண்ட ஹெச்டிசி U அல்ட்ரா ஸ்மார்ட்போன் ரூ.59,990 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஹெச்டிசி U பிளே மொபைல் ரூ. 39,990 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

ஹெச்டிசி U அல்ட்ரா ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது

கூகுள் ஹோம் போன்ற வசதியை கொண்டுள்ள ஹெச்டிசி யூ மொபைல் வரிசையில் இடம்பெற்றுள்ள செயற்க்கை அறிவு திறனை கொண்ட பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகும்.

ஹெச்டிசி யூ அல்ட்ரா

லிக்யூடு  3டி டிசைன் அம்சத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் மெட்டல் அமைப்பின் பெற்று 5.7 அங்குல LCD 5 டிஸ்பிளேவுடன் 2560×1440 பிக்சலை பெற்று பொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பினை பெற்றதாகும். யூ அல்டரா கருவியில் கொடுக்கப்பட்டுள்ள இரண்டாம் கட்ட டிஸ்பிளே வாயிலாக 150 x 1040 பிக்சல் அளவில் அறிவிப்புகள் , நேரம் மற்றும் ஹெச்டிசி சென்ஸ்  செயற்க்கை அறிவு அமைப்பினை கொண்டுள்ளது.

7.0 இயங்குதளத்தை அடிப்படையில் 2.15 Ghz குவால்காம் ஸ்னாப்டிராக் 821 குவாட்கோர் பிராசஸருடன் 4GB ரேம் உடன் 64GB  உள்ளடங்கிய சேமிப்பினை  பெற்று கூடுதலாக மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256 ஜிபி வரையிலான சேமிப்பினை பெறலாம்.

போட்டோ

12-megapixel அல்ட்ராமெகாபிக்ணல் பின்புற கேமராவில் f/1.8 அப்ரேச்சர் வாயிலாக  ஆப்டிகல் படம் செயல்பாடு , வேகமாக செயல்படும் லேசர் ஃபோகஸ்  ,  PDAF மற்றும் எல்இடி டியூவல் டோன் ஃபிளாஷ் இடம்பெற்று  4K தரத்தில் வீடியோ பெறலாம் மேலும்  3D ஆடியோ தொடர்பும் கிடைக்கும். முன்புறத்தில் 16-megapixel ஹெச்டி தரத்துடன் வீடியோ பதிவு செய்யும் வசதியை கொண்டுள்ளது.

மிக வேகமாக சார்ஜ் ஏறும் முறையான 3.0 அமைப்பினை கொண்டுள்ள ஹெச்டிசி U அல்ட்ரா பேட்டரி திறன் 3,000mAh  பெற்றுள்ளது. முன்பக்க கைரேகை ஸ்கேனர் இரு சிம் கார்டு , 4G LTE, NFC, புளூடூத் 4.0, Wi-Fi 802.11 a/b/g/n/ac மற்றும் டைப்-சி சப்போர்ட் மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் இடம்பெற்றுள்ளது.

ஹெச்டிசி U அல்ட்ரா ஸ்மார்ட்போன் விலை ரூ. 59,990 ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here