அறிமுகமானது டூயல் டிஸ்பிளே மற்றும் 10 ஜிபி கொண்ட விவோ

NEX சிரீஸ்களை அறிமுகபடுத்தியுள்ள சீனா ஹெட்செட் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் புதிதாக NEX டூயல் டிஸ்பிளே எடிசன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் 10 ஜிபி ரேம்களுடன், டூயல் டிஸ்பிளே மற்றும் பின்புறத்தில் டிரிபிள் கேமரா சிஸ்டம் கொண்டதாக இருக்கும்.

விவோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வேயபோ இணையதள கணக்கில் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் இந்திய மதிப்பில் தோரயமாக 52 ஆயிரம் ரூபாய் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து விவோ நிறுவன உயர்அதிகாரி ஸ்பார்க் நீ வெளியிட்டுள்ள அறிக்கையில், விவோ நிறுவனத்தின் புதிய லைன்-அப்களின் தொடர்ச்சியாக NEX சீரிஸ்கள் பயனாளர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும். இதுமட்டுமின்றி இதுவரை இல்லாத எதிர்கால தொழில்நுட்ப வசதிகளை இந்த ஸ்மார்ட்போன்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிமுகமானது டூயல் டிஸ்பிளே மற்றும் 10 ஜிபி கொண்ட விவோ

இந்த ஸ்மார்ட்போன்கள் 6.39 இன்ச் அல்ட்ரா முழுவியூ டிஸ்பிளேகளுடன் 91.63 சதவிகித ஸ்கிரீன்-டு-பாடி விகிதம் கொண்டதாக இருக்கும். கூடுதலாக போனின் பின்புறத்தில் 5.49 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் லூனார் ரிங் ஒன்றும் பொருத்தப்பட்டு, ஒளிரும் கலரில், மியூசிக் பல்ஸ்கள் உள்ளதை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

NEX டூயல் டிஸ்பிளே எடிசன் கேமரா செட்டாப்களில் 12 MP டூயல்-பிக்சல் மெயின் கேமரா (சோனி IMX363 சென்சார் மற்றும் 4-ஆச்சிஸ் OIS) கொண்டதாக இருக்கும். இத்துடன் இரவிலும் இயங்கும் சிறப்பு வீடியோ கேமிரா மற்றும் TOF 3D கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

அறிமுகமானது டூயல் டிஸ்பிளே மற்றும் 10 ஜிபி கொண்ட விவோ

இந்த ஸ்மார்ட்போனில் கோல்காம் ஸ்நாப்டிராகன் 845 ஆக்டோ-கோர் பிராசசர் மற்றும் 10 ஜிபி ரேம்களுடன் 128 ஜிபி ஸ்டோரேஜ்களுடன் உள்ளது.

இதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் கேமராவுடன் 3D சென்சிங் டெக்னாலஜி கொண்ட பேசியல் ரெககநேசன் வசதிகளும் உள்ளன.