உலகிலேயே 15 மிக விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள்

ஒரு லட்ச ரூபாக்கு ஸ்மார்ட் போனுக்கு செலவு செய்தால் ஆச்சரியமாக பார்க்கும் நிலை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எக்ஸ்எஸ் மாக்ஸ் 512 ஜிபி ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது இந்த போன்களின் விலை 1.44 லட்ச ரூபாயாகும். ஹவாய் நிறுவனமும் தனது புதிய படைப்பான மேட் 20 போர்ச் ஸ்மார்ட்போன்களை இதே போன்ற விலையில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் உலகிலேயே 15 மிக விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

உலகிலேயே 15 மிக விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள்

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்எஸ் மாக்ஸ்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வரவான ஆப்பிள் ஐபோன் எக்ஸ்எஸ் மாக்ஸ், 512ஜிபி போன்கள் விலையுர்ந்த போனாக இருந்து வருகிறது. இந்த போனின் இந்திய விலை 1 லட்சத்து 44 ஆயிரத்து 900 ரூபாயாகும்.

உலகிலேயே 15 மிக விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள்

வேர்டு அஸ்டெர் பி கோல்ட்

வேர்டு நிறுவனம் தனது புதிய படைப்பான அஸ்டெர் பி கோல்ட் போன்லை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன்களின் சரசாரியாக 3.79 லட்ச ரூபாய், இதுமட்டுமின்றி கோல்ட் பிளேட் மாடல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதன் விலை சராசரியாக 10.4 லட்ச ரூபாயாகும்.

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்எஸ் (512 ஜிபி)

512 ஜிபி கொண்ட ஆப்பிள் ஐபோன் எக்ஸ்எஸ் போன் இந்தியாவில் 1.35 லட்ச ரூபாய் விலையில் விற்பனையாகிறது. இதுவே இந்தியாவில் விற்பனையாகும் அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது

ஹவாய் மேட் 20 ஆர்எஸ் போர்ச் டிசைன்

ஹவாய் மேட் 20 ஆர்எஸ் போர்ச் டிசைன் ஸ்மார்ட் போன்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன்கள் 2095 யுரோ விலையில் விற்பனையாகிறது. இந்த போனின் இந்திய விலை 1.77 லட்ச ரூபாயாகும்.

உலகிலேயே 15 மிக விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள்

கேவியர் ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ் கோல்ட் / பிளாக்)

புதிய கேவியர் ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ் ஸ்மார்ட் போன்களில் கிராபிக்ஸ்களுடன் டைடானியம் அல்லது கோல்டு பாலிஷ் செய்யப்பட்டுள்ளது. டைட்டானியம் பாலிஷ் செய்யப்பட்ட போன்கள் 4.6 லட்ச ரூபாய் விலையிலும், கோல்ட் பாலிஷ் செய்த ஸ்மார்ட் போன்கள் 5.26 லட்ச விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

டயமண்ட் கிரிப்டோ

உலகளவில் பழைய டயமண்ட் கிரிப்டோ ஸ்மார்ட் போன்கள் விலை உயர்ந்த போன்களாக இருந்து வரும் நிலையில், தற்போது அதிக பாதுகாப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன்கள் விண்டோஸ் CE ஆபரேடிங் சிஸ்டம் மற்றும் மோட்டோரோலா MX21 பிராசசர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் இந்திய விலை 8.97 கோடி ரூபாயாகும்.

உலகிலேயே 15 மிக விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள்

VIPN பிளாக் டயமண்ட்

சர்வதேச அளவில் $300,000-க்கு விற்பனையாகும் இந்த போன்களின் இந்திய விலை 2,07,15,990 ரூபாய் அல்லது 2.07 கோடி ரூபாயாகும் இந்த போன்களில் USP யூனிட்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இந்த போனின் விலை உயர்வுக்கு டைமண்ட்கள் பதிக்கப்பட்டுள்ளதே காரணமாகும்.

உலகிலேயே 15 மிக விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள்

சாவெள்ளி சம்பக்னே டைமோண்ட் (Savelli Champagne Diamond )

இந்த ஸ்மார்ட் போன்கள் அதிக விலை கொண்ட பொருட்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போனின் இந்திய விலை 39,36,038 ரூபாயாகும். இதில் 18 கேரட் ரோஸ் கோல்ட் செல்களுடன் 395 ஒயிட் மற்றும் கோஞாக் டைமண்ட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிவைஸ் ஆண்டிராய்டு ஆபரேடிங் சிஸ்டமில் இயக்கும்.

கோல்டுவிஷ் எலிப்ஸ்

இந்த கோல்டுவிஷ் எலிப்ஸ் ஸ்மார்ட் போன்கல்லின் விலை 5.27 லட்ச ரூபாயாகும். கையால் தயாரிக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் போன்களில் லெதர் மற்றும் அரிய மெட்டல்கள் கொண்டு பிரேம் ஒர்க் செய்யப்பட்டுள்ளது. இவை 5.5 இன்ச் வரை ஸ்டிரச் ரெசிச்டேன்ஸ் கொண்டதாக இருக்கும். மேலும் டச் ஸ்கிரீன், கோல்காம் ஸ்நாப்டிராகன் பிராசர்களுடன், ஆண்டிராய்டு ஆபரேடிங் சிஸ்டத்தில் இயங்கும்.

உலகிலேயே 15 மிக விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள்

கோல்டுவிஷ் எலிப்ஸ் மேஜிக் ஒனிக்ஸ் அலிகேட்டர் ஸ்மார்ட்போன்

இந்த ஸ்மார்ட் போன்களின் விலை கோல்டுவிஷ் போன்களை அதிகமாகும். கோல்டுவிஷ் எலிப்ஸ் மேஜிக் ஒனிக்ஸ் அலிகேட்டர் ஸ்மார்ட்போன்களின் விலை 5.5 லட்ச ரூபாயாகும். ஆண்டிராய்டு ஆபரேடிங் சிஸ்டமில் இயங்கும் இந்த போன்கள் கோல்காம் ஸ்நாப்டிராகன் பிராசசர் கொண்டதாக இருக்கும். இதில் பிளாக் அலிகேட்டர் லெதர் பயன்படுத்தபபடுவதால் அதிக விலை கொண்ட போனாக இருந்து வருகிறது.

உலகிலேயே 15 மிக விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள்

சீரின் சோழரின் (Sirin Solarin) ஸ்மார்ட் போன்கள்

பாதுகாப்பு வசதிகள் நிறைந்த இந்த ஸ்மார்ட் போனின் விலை 9 லட்ச ரூபாயாகும். பல்வேறு வசதிகள் கொண்ட போனாக இருந்த போதும், இந்த போன்கள் ஆண்டிராய்டு லாலிபாப் ஓஎஸ் சில் இயங்குவது வாடிகையாளர்களின் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உலகிலேயே 15 மிக விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள்

போர்ச் டிசைன் ஹவாய் மேட்

ஹவாய் நிறுவனத்தின் அதிக விலை கொண்ட போனாக இருந்து வரும் இந்த்ஸ்மார்ட் போன், டைமண்ட் பிளாக் கலர் ஆப்சன்கிளி வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட் போன்களின் விலை 1,79,318 ரூபாயாகும். மேலும் இதில் தனித்துவமாக உருவாக்கப்பட்ட லெதர் கேஸ் ஒன்று உள்ளது.

உலகிலேயே 15 மிக விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள்

ஹானர் நோட் 10 ரோல்ஸ் ராய்ஸ்

ஹவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் நிறுவனம் விரைவில் ஹானர் நோட் 10 ரோல்ஸ் ராய்ஸ் எடிசன் போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட் போன்களின் விலை 1,02,393 ரூபாயாக இருக்கும் என்றும் சீனாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ பைன்ட் எக்ஸ் லம்போர்கினி பதிப்பு

ஒப்போ நிறுவனம் லம்போர்கினி பதிப்பு ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் போன்களின் இந்திய விலை 1.52 லட்ச ரூபாயாகும். இந்த நவீன வசதிகள் பல இடம் பெற்ற போதும், மொடோரிஸ்டு கேமரா வைக்கப்படவில்லை என்பது குறையாக உள்ளது.

உலகிலேயே 15 மிக விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள்

டோனினோ லம்போர்கினி ஆல்ஃபா ஒன் (ரூ 169,099)

டோனினோ லம்போர்கினி ஆல்ஃபா ஒன் ஸ்மார்ட் போன்களின் இந்திய விலை 1,69,099 ரூபாயாகும். மேலும் இதில் இத்தாலியன் பிளாக் லெதர்களுடன் பல்வேறு கிளாசிக் ஸ்டைல்களையும் கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் கோல்காம் ஸ்நாப்டிராகன் 820 பிராசசர்களுடன் 4GB ரேம் மற்றும் 64GB இன்டர்னல் ஸ்டோராஜ் மற்றும் ஆண்டிராய்டு நக்கட் ஓஎஸ்-சில் இயங்கும்.