அலெக்ஸாவின் 4 புதிய டிவைஸ்கள் அடுத்த மாதம் வெளியாகிறது

இந்தியாவில் புதிய போர்டேபில் ஹெட்செட், ஸ்மார்ட் ஸ்பீக்கர் மற்றும் செட்டாப் பாக்ஸ் போன்ற டிவைஸ்களை அமேசான் அலெக்ஸா பில்டின் மூலம் அறிமுகம் செய்ய உள்ளதாக நான்கு இந்திய தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஹார்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான ஐபால், சிரேனா டெக்னாலஜிஸ், போட் மற்றும் மைபாக்ஸ் போன்ற நிறுவனங்கள் அலெக்ஸா பொருட்களை அலெக்ஸா வாய்ஸ் சேவைகளுடன் அலெக்ஸா தயாரிப்புகளை நேரடியாக மேற்கொள்ள உள்ளது. இந்த டிவைஸ்கள் வாய்ஸ் மூலம் கனெக்ட் செய்யும் வசதிகள் கொண்டதாக இருக்கும்.

மேற்குறிய நான்கு டிவைஸ்களும் அடுத்த மாதம் விற்பனைக்கு வர உள்ளது என்றும், இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வாய்ஸ் மூலம் இசையை கேட்க முடியும் என்றும் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலெக்ஸாவின் 4 புதிய டிவைஸ்கள் அடுத்த மாதம் வெளியாகிறது

ஐபால் நிறுவனத்தின் Breathe-M வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன் ஹெட்செட்கள் மைக் உடன் வெளியாக உள்ளது. இவை 2,225 ரூபாய் விலையில் கிடைக்க உள்ளது,

சிரேனா டெக்னாலஜிஸ், நிறவனத்தின் “Vood” ஸ்மார்ட் போர்டேபில் ஸ்பீக்கர்கள் 2,699 ரூபாய் விலையில் விற்பனைக்கு வர உள்ளது.

போட் நிறுவனத்தின் போட் ஸ்டோன் 700A ஷாக் மற்றும் வாட்டர் புரூப் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் 7,999 ரூபாய் விலையில் விற்பனைக்கு வர உள்ளது.

மைபாக்ஸ் நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ் அலெக்ஸா கிட்கள், வாய்ஸ் ரிமோட்களுடன் கூடியதாக இருக்கும். இந்த டிவைஸ்கள் 1,999 ரூபாய் விலையில் கிடைக்கும்.

இதற்கு முன்பு அலெக்ஸா பில்ட்-இன் டிவைஸ்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மோட்டோரோலா நிறுவனத்தின் ப்ளஸ் 3 மற்றும் ப்ளஸ் 3 மேக்ஸ் ஹெட்போன்கள் முறையே 1,599 மற்றும் 2,599 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது.

போஸ் ஹோம் ஸ்பீக்கர் 500, போஸ் சவுண்ட்பார் 500 மற்றும் போஸ் சவுண்ட்பார் 700 டிவைஸ்கள் முறையே 39,000, 59,000 மற்றும் 79,000 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது.

அலெக்ஸாவின் 4 புதிய டிவைஸ்கள் அடுத்த மாதம் வெளியாகிறது

அமேசான் நிறுவனம் கடந்த ஆண்டில் புதிய எக்கோ டிவைஸ்களை இந்தியாவில் வெளியிட்டது.

கிரிஸ்பர சவுண்ட் மற்றும் மேம்படுத்தப்பட்ட பேப்ரிக் டிசைன்களுடன் கூடிய எக்கோ டாட் புதிய ஸ்பீக்கர்கள் 4,499 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது.

ஜிக்பீக் ஹாப் மூலம் தயாரிக்கப்பட்ட எக்கோ பிளஸ்கள், மேம்படுத்தப்பட்ட ஸ்பீக்கர் மற்றும் புதிய டிசைன்களுடன் வெளி வந்துள்ள இந்த டிவைஸ்சின் விலை 14, 999 ரூபாயாகும்.

எக்கோ சப், என்ற மியூசிக் பிளே பேக் எக்கோ டிவைஸ்கள் 12,999 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது.

எக்கோ டாட் மற்றும் எக்கோ பிளஸ் டிவைஸ்கள் இந்த மாதத்தில் இறக்குமதி செய்யப்படும். எக்கோ சப்கள் அடுத்த ஆண்டில் இந்தியாவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.