மீண்டும் மொபைல் சந்தையில் ஆண்ட்ராய்டு துனைகொண்டு களமிறங்க உள்ள நோக்கியா 5 ஸ்மார்ட்போன்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. 2017 மொபைல் வோர்ல்டு காங்கிரஸ் (Mobile World Congress – MWC) அரங்கில் நோக்கியா மொபைல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அடுத்தடுத்து 5 நோக்கியா மொபைல் அறிமுகம் - 2017

நோக்கியா D1C என்ற பெயரில் ஒரு மொபைல் செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் மேலும் 4 மொபைல் மாடல்களை அதிரடியாக களமிறக்க நோக்கியா திட்டமிட்டுள்ளது.  நோக்கியாவின் ஸ்மார்ட்போன் டிஸ்பிளே 5 அங்குலம் முதல் 5.7 அங்குலத்துக்குள் அமைந்திருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

1. நோக்கியா D1C மொபைல்

டி1சி மொபைலில் இருவிதமான ரேம் ஆப்ஷனுடன் வரலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த மாடலில் 2ஜிபி மற்றும் 3ஜிபி ரேம் பெற்று ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தினை அடிப்படையாக கொண்டு செயல்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுவே தொடக்கநிலை நோக்கியா மாடலாக அமையலாம் என கூறப்படுகின்ற டி1சி விலை ரூ.10,000 முதல் தொடங்கலாம்.

முழுமையாக ; நோக்கியா டி1சி பற்றி படிக்க 

2. நோக்கியா பிக்ஸல்

23 மெகாபிக்சல் கேமராவுடன் அதிநவீன சிறப்பம்சங்களை கொண்ட இந்த நோக்கியா பிக்சல் மாடல் சமீபத்தில் ஜீக்பெஞ்ச் சோதனையில் தகவல் கசிந்தது.  ஸ்னாப்டிராக்ன் 835 சிப்செட் அமைப்புடன் 6 ஜிபி ரேம் பெற்ற மாடலாக மெட்டல் பாடியுடன்  23 மெகாபிக்சல் காரல் ஜெசிஸ் எல்இடி பிளாஷ் கேமராவுடன் மெட்டல் பாடி அமைப்பினை பெற்று வாட்டர் ரெசிஸ்டன்ஸ்பெற்றிருக்கலாம். இந்த உயர்தர நோக்கியா பிக்ஸல் மொபைல் விலை ரூ.30,000 இருக்கலாம்.

அடுத்தடுத்து 5 நோக்கியா மொபைல் அறிமுகம் - 2017

3. நோக்கியா Z2 plus

நோக்கியா இசட் 2 பிளஸ் மொபைல் என அறியப்பட்டு ஜீக்பெஞ்ச் சோதனையில் தகவல் கசிந்த Z2 பிளஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 820 சிப்செட்களுடன் 4ஜிபி ரேம் பெற்று ஆண்ட்ராய்ட் மார்ஷ்மெல்லா இயங்குதளத்தில் செயல்படலாம் என கருதப்படுகின்றது.

இதுதவிர மேலும் இரண்டு புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் வரலாம் என அதிகார்வப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகின்ற மொபைல் வோர்ல்டு காங்கிரஸ் அரங்கத்தில் நிச்சியமாக நோக்கியா மொபைல் களமிறங்கும் என்பது உறுதியாகியுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here