சமீபத்தில் விற்பனைக்கு வந்துள்ள லீ ஈகோ மொபைல் நிறுவனத்தின் லீ 2 மற்றும் லீ மேக்ஸ் 2 மொபைல்களை தொடர்ந்து 8GB ரேம் பெற்ற மொபைலாக லீ மேக்ஸ் 2  மொபைலை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

8 GB ரேம் மொபைலாக வரவுள்ள லீ ஈகோ லீ மேக்ஸ் 2
லீ மேக்ஸ் 2 ஸ்மார்ட்போன் 5.7 இன்ச் குவாட் ஹெச்டி டிஸ்பிளேவினை கொண்ட மாடலில் 2.15GHz குவாட்-கோர் ஸ்னாப்டிராகன்  820 64 பிட் பிராசஸருடன் இனைந்த Adreno 530 GPU சேர்ந்து 4GB மற்றும் 6GB என இருவிதமான ரேம் ஆப்ஷனில் லீ மேக்ஸ் 2 தற்பொழுது கிடைக்கின்றது.
மேலும் 4GB மாடலில் 32GB உட்புற நினைவு திறன் மற்றும் 6GB மாடலில் 64GB இன்ட்ரனல் ஸ்டோரேஜ் பெறும் வகையில் உள்ள லீ மேக்ஸ் 2 மொபைலில் டியூவல் எல்இடி ஃபிளாஷ் ,  f/2.0 aperture , Sony IMX230 சென்சார் ,  OIS, 6P லென்சஸ் மற்றும் PDAF (phase detection autofocus) போன்றவற்றை கொண்டு மிக நேர்த்தியான படங்களை வழங்கவல்ல 21 மெகாபிக்ஸல் ரியர்கேமராவினை பெற்றுள்ளது. முன்புறத்தில் 8 மெகாபிக்ஸல் கேமராவினை பெற்றிருக்கும்.
3100mAh பேட்டரியுடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை பெறலாம்.
இதே மாடலை அடிப்படையாக 8ஜிபி ரேம் கொண்ட மாடலுக்கு தீவரமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளில் லீஈகோ நிறுவனம் ஈடுபட்டு வருகின்றதாக சீனா செய்திதளம் தகவல் வெளியிட்டுள்ளது.  இதன் மொபைலை மிக வேகமாக இயங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
லீ 1 எஸ் ஈகோ வாங்க ;   8 GB ரேம் மொபைலாக வரவுள்ள லீ ஈகோ லீ மேக்ஸ் 2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here