samsung-galaxy-a90-render-video-shows

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ வரிசை மாடல்களில், புதிய கேலக்ஸி ஏ80 அல்லது கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன் இன்றைக்கு நடைபெற உள்ள  “A Galaxy Event” நிகழ்வில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட வாய்ப்புகள் உள்ளது.

இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் முன்பே கேலக்ஸி ஏ10, ஏ20, ஏ30, ஏ50 போன்ற மாடல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்து கேலக்ஸி ஏ வரிசையில் செல்ஃபி மற்றும் பிரைமரி என இரண்டுக்கும் ஒரே கேமராவே பெற்ற கேலக்ஸி ஏ90 அல்லது கேலக்ஸி ஏ80 இன்று அறிமுகம் செய்யப்படலாம்.

கேலக்ஸி ஏ80 அறிமுக விழா காண்பது எப்படி ?

இன்றைக்கு ஒரே நேரத்தில் பாங்காக், மிலன் மற்றும் சா பவுலோ நகரங்களில் அறிமுக விழாவை கொரியாவின் சாம்சங் எல்க்ட்ரானிக்ஸ் நடத்த உள்ளது. இந்த விழாவில் புதிய கேலக்ஸி ஏ வரிசை மாடலை வெளியிட உள்ளது.

இந்திய நேரப்படி இந்த அறிமுக விழா மாலை 5 மணி 30 நிமிடங்களுக்கு தொடங்க உள்ளது. இதனை நிகழ் நேரலையில் காண அதிகார்வப்பூர்வ சாம்சங் செய்திப்பிரவு தள முகவரியில் இங்கே காணலாம்.. http://news.samsung.com/in/

சாம்சங் கேலக்ஸி A80 ஸ்மார்ட்போன் எதிர்பார்ப்புகள்

6.7 அங்குல திரையை கொண்டு முழு HD+ (2400 x 1080 பிக்சல்ஸ்) OLED டிஸ்பிளே பெற்றிருப்பதுடன், இந்த போனை இயக்குவதற்கு என ஸ்னாப்டிராகன் 7150 சிப்செட் கொண்டிருக்கலாம். இந்த மொபைலில் செல்பி மற்றும் பிரைமரி கேமரா இரண்டும் ஒன்றின் மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.

கேமரா பிரிவில் 48 எம்பி சென்சார், 5 எம்பி சென்சார் பெற்று 25W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் கூடிய  3,700mAh பேட்டரி கொண்டு இருக்கலாம்.

இந்த வீடியோவில் காணலாம்.

மேலும் தொடர்ந்து சாம்சங் மொபைல் செய்திகள் மற்றும் ஸ்மார்ட்போன் செய்திகள்படிக்கலாம். எங்களுடைய ஃபேஸ்புக் மற்றும் ட்வீட்டர் பக்கங்களில் @gadgetstamilan இணைந்திருங்கள்..,