ஜியோபோனுக்கு எதிராக ஏர்டெல் நிறுவனம் மீண்டும் புதிய பட்ஜெட் விலை செல்கான் ஸ்டார் 4G+ ஸ்மார்ட்போன் மாடலை ரூ.1249 நிகர மதிப்பு அடிப்படையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அனைத்து முன்னணி ரீடெயிலர்களிடமும் கிடைக்கும்.

செல்கான் ஸ்டார் 4G+

செல்கான் நிறுவனத்துடன் இணைந்து ஏர்டெல் டெலிகாம் நிறுவனம் ரூ.2749 விலையிலான ஸ்மார்ட்போனை ரூ.1249 விலையில் வழங்குவதாக அறிவித்துள்ளது. செல்கான் ஸ்டார் 4ஜி பிளஸ் கருவியில் குவாட் கோர் எஸ்ஓசி சிப்செட் கொண்டு இயக்கப்பட்டு 512 எம்பி ரேம் பெற்று 4 அங்குல திரையுடன், முன்புறத்தில் 2 மெகாபிக்சல் சென்சார் கேமரா மற்றும் பின்புறத்தில் 3.2 மெகாபிக்சல் சென்சார் கேமரா வழங்கப்பட்டு 1,800mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றது.

இந்த ஸ்மார்ட்போனில் யூடியூப் , பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் உடன் மை ஏர்டெல் ஆப், வின்ங்க் மியூசிக் மற்றும் ஏர்டெல் டிவி ஆகியவற்றுடன் கிடைக்க உள்ளது.

கேஸ்பேக் பிளான் விபரம்

ரூ.2749 கட்டணத்தை செலுத்தி வாங்கப்படுகின்ற ஸ்டார் 4ஜி பிளஸ் கருவியில் ஏர்டெல் சிம் கொண்டு முதல் 18 மாதங்களுக்கு ரூ.169 கட்டண திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில் முதல் தவனையில் ரூ.500 மற்றும் அடுத்த தவனையில் அடுத்த 18 மாதங்கள் ரீசார்ஜ் செய்தால் 1000 என மொத்தம் ரூ.1500 திரும்ப பெறுவதனால் இந்த மொபைல் விலை ரூ.1249 ஆகும்.

மேலே வழங்கப்பட்டுள்ள திட்டத்தை தவிர முதல் 18 மாதங்களுக்கு அதிகபட்சமாக ரூ.3000 வரை ரீசார்ஜ் செய்தாலும் முதல் தவனையில் ரூ.500 மற்றும் அடுத்த தவனையில் அடுத்த 18 மாதங்கள் ரீசார்ஜ் செய்தால் 1000 என மொத்தம் ரூ.1500 திரும்ப பெறுவதனால் இந்த மொபைல் விலை ரூ.1249 ஆகும்.