ரூ.2000 முதல் ரூ. 2500 விலையில் ஏர்டெல் வெளியிடும் போன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் 1ஜிபி ரேம் பெற்றதாக ஜியோ போன் மாடலுக்கு எதிராக வரவுள்ளது.

ஏர்டெல் போன்

இந்திய தொலைத்தொடர்பு வட்டத்தை மிகுந்த போட்டி நிறைந்ததாக  மாற்றிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.1500 விலையில் இலவசமாக வழங்கப்பட உள்ள ஜியோபோன் 4ஜி வோல்ட்இ அம்சத்துடன் கிடைக்க உள்ள நிலையில், இந்த மொபைல் போன் மாடலுக்கு ஈடான போட்டியை வழங்க ஏர்டெல் போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஜியோபோன் போல குறிப்பிட்ட சில வசதிகளுடன் வரையறுக்கப்பட்ட ஜியோ ஆப்ஸ் போன்றவற்றை மட்டும் பெற்றிருக்கின்ற 4ஜி பீச்சர் போன் போல் அல்லாமல், பல்வேறு வசதிகளுடன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அடிப்படையில் இயக்கப்பட உள்ளதால் கூகுள் பிளே ஸ்டோர் வாயிலாக செயலி தரவிறக்கலாம்.

ஏர்டெல் போன் நுட்ப விபரம்

ஏர்டல் ஆண்ட்ராய்டு மொபைல் 4 அங்குல திரையுடன், ஆண்ட்ராய்டு ஓஎஸ் அடிப்படையில், 1ஜிபி ரேம் பெற்று 4ஜிபிஉள்ளடக்க சேமிப்புடன், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் பெற்றதாக முன் மற்றும் பின் கேமரா, 4ஜி வோல்ட்இ வசதியுடன் சிறப்பான பேட்டரி திறன் கொண்டதாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏர்டெல் ஃபீச்சர் மொபைல் போன் விலை ரூ.2,500 முதல் அதிகபட்சமாக ரூ.2,700 வரையிலான விலையில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்ற இந்த மாடல் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக அதாவது அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வருகின்ற நவராத்திரி பண்டிகைக்கு முன்னதாக 60 லட்சம் முன்பதிவுகளை பெற்றுள்ள ஜியோஃபோன் டெலிவரி தொடங்கப்பட உள்ளது. மேலும் ஐடியா மற்றும் வோடஃபோன் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் மொபைல் தயாரிப்பாளர் இன்டெக்ஸ் நிறுவனம் 4ஜி வசதி பெற்ற மொபைலை அறிமுகம் செய்ய உள்ளது.