அல்காடெல் 1 ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) விபரம் வெளியானது

ரஷ்யாவில் கிடைக்கப் பெற்றுள்ள தகவலின் அடிப்படையில் அல்காடெல் 1 ஆண்ட்ராய்டு ஓரியோ ( கோ எடிஷன் ) மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அல்காடெல் 1 எக்ஸ் மாடலை விட விலை குறைந்ததாக காணப்படுகின்றது.

அல்காடெல் 1 ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்)

ஹை-என்ட் மொபைல்களை விட பட்ஜெட் ரக மொபைல்கள் மீதான ஈர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் குறைந்த விலையில் மொபைல்களை தயாரிப்பதில் சீன நிறுவனங்கள் மிகுந்த முனைப்பாக செயற்பட்டு வருகின்றது,.

சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் அரங்கில் வெளியான கோ எடிஷன் ரக அல்காடெல் 1X, அல்காடெல் 3V, அல்காடெல் 5 போன்றே முன்னேற்பாடாக கோ பதிப்பின் கூகுள் செயலிகளை பெற்றதாக விளங்க உள்ள அல்காடெல்  1 நுட்ப விபரத்தை தொடர்ந்து காணலாம்.

5 அங்குல தெளிவு திரையுடன் 480×960 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 18: 9 என்கிற அளவிலான திரை விகிதம் கொண்டுள்ள இந்த போனில் 1.3 GHz க்வாட் கோர் கோர்டெக்ஸ்-ஏ53 சிபியூ உடனான மீடியாடெக் MT6739 சிப்செட் கொண்டு 1 ஜிபி ரேம் உடன் 8 ஜிபி உள்ளீட்டு சேமிப்பை பெற்று விளங்குகின்றது.

அல்காடெல் 1 போனில்  5 எம்பி பின்புற கேமரா மற்றும் 2 எம்பி முன்பக்க கேமரா (ஆட்டோஃபோகஸ் உடன் கிடைக்கலாம். 2000 mAh பேட்டரி பெற்றதாக வரவுள்ள இந்த போனில் இரட்டை சிம் கார்டு ஆதரவுடன் 4ஜி எல்டிஇ, அளவுகளில்  137.6 x 65.7 x 9.8 மிமீ மற்றும் 134 கிராம் எடையைக் கொண்டுள்ள இந்த போனில் கருப்பு, நீலம் மற்றும் கோல்டு ஆகிய வண்ணங்களை பெற்று விளங்கும். அல்காடெல் 1 மொபைல் போன் விலை விபரம் குறித்தான தகவல் வெளியாகவில்லை

Recommended For You