இந்தியாவில் ஓப்போ F7 மொபைல் போன் விற்பனைக்கு அறிமுகமாகிறதுசீனாவின் ஓப்போ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், இந்தியாவில் மிக விரைவில் ஸ்டைலிஷான ஓப்போ F7 ஸ்மார்ட்போன் மாடலை மார்ச் 26ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளதை தனது ட்வீட்டர் பக்கத்தில் டீசர் செய்துள்ளது.

ஓப்போ F7 மொபைல்

இந்தியாவில் ஓப்போ F7 மொபைல் போன் விற்பனைக்கு அறிமுகமாகிறது

ஸ்மார்ட்போன் சந்தையில் மிகவும் சவாலான மொபைல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையில், ஓப்போ மொபைல் போன் தயாரிப்பாளர் ஓப்போ எஃப்7 மொபைலை முழுமையான ஹெச்டி திரை அம்சத்தை கொண்டதாக நேர்த்தியாக பெசல் லெஸ் கொண்டதாக வந்துள்ளது.

6.2 அங்குல full HD+ திரையை பெற்று 19:9 ஆஸ்பெக்ட் விகதத்தை கொண்டதாக வரவுள்ள இந்த மொபைலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 670 சிப்செட் கொண்டு இயக்கப்படலாம் அல்லது மீடியாடெக் ஹீலியோ பி6 பிராசெஸரை பெற்று ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை பின்பற்றி கலர் 4.0 ஓஎஸ் கொண்டு இயங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செல்பி படங்களை செயற்க்கை நுண்ணறிவு சார்ந்த அம்சத்துடன் பெறும் வகையில் 25 மெகாபிக்சல் சென்சார் கேமராவை வழங்கியிருக்கும். HDR, AR ஸ்டிக்கர் ஆகியவற்றை அழகுப்படுத்த வழங்க உள்ளது.

வருகின்ற மார்ச் 26ந் தேதி விற்பனைக்கு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற ஓப்போ எஃப்7 மொபைல் போன் குறித்து ட்விட்டர் டீசரில் பின்புலத்தில் உள்ள கிரிக்கெட் வீரரை கண்டறிய அழைப்பு விடுத்துள்ளது. பின்புலத்தில் அமைந்துள்ள கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா -வாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வரும் மார்ச் 12ந் தேதி , சீனாவில் ஓப்போ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் , புதிய ஸ்மார்ட்போன் மாடல்களான ஓப்போ R15 மற்றும் ஓப்போ R15 பிளஸ் ஆகிய மாடல்களை வெளியிட உள்ளது.