Realme 3 Pro: ரியல்மி 3 ப்ரோ

முன்பாக வெளிவந்த ரியல்மி 3 மாடலின் அடிப்படையில் புதிய ரியல்மி 3 ப்ரோ (Realme 3 Pro) அடுத்த சில நாட்களுக்குள் விற்பனைக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் இத மொபைலின் முக்கிய விபரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

ரியல்மி 3 ப்ரோ தொடர்பான நுட்ப விபர கசிவில் மிக முக்கியமானதாக Sony IMX519 கேமரா சென்சார் பிரைமரி வசதிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சென்சாரானது ஒன்பிளஸ் 6டி மொபைலில் இடம்பெற்றிருக்கின்றது.

 ரியல்மி 3 ப்ரோ எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா .!

இந்தியாவில் விற்பனையில் கிடைக்கின்ற ரெட்மி நோட் 7 ப்ரோ மாடலுக்கு நேரடியான போட்டியாக விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற ரியல்மி 3 ப்ரோ போனில் இடம்பெற உள்ள முக்கிய விபரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

இந்த மொபைல் போனின் சிப்செட் தொடர்பான விபரங்களில், தற்போது வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 கொண்டு இயக்கப்பட்டு 4 ஜிபி ரேம், 32 ஜிபி உள் சேமிப்பு, 64 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு வசதி என கிடைக்கப் பெறலாம்.

குறிப்பாக இந்த போனின் கேமரா பிரிவில் பிரபலமான ஒன் பிளஸ் 6டி மாடலில் இடம்பெற்றுள்ளதை போன்ற உயர் ரக சோனி IMX519 சென்சார் இடம்பெற்றிருக்கும் என கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் காணும்போது ரெட்மி நோட் 7 புரோவை விட சிறப்பான படம் மற்றும் வீடியோ பதிவு செய்ய இயலும் என கூறப்படுகின்றது.

ரியல்மி 3 ப்ரோவின் பேட்டரி தொடர்பான அம்சத்தில் மிக முக்கியமாக VOOC 3.0 விரைவு சார்ஜர் பெற்றிருக்கும். இதன் காரணமாக 0-75 சதவீத சார்ஜ் வெறும் 30 நிமிடங்களில் பெற்று விடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நடப்பு ஏப்ரல் மாதத்தில் முன்பே ரியல்மி 3 விற்பனைக்கு அறிமுத்தின் போதே ஒப்போ ரியல்மி உறுதி செய்துள்ளதனால், ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் விற்பனைக்கு வரக்கூடும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.