இந்தியாவில் ரூ.7,999 விலையில் அமேசான் கிண்டில் வெளியானது

மின் நூல் வாசிப்பாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் அமேசான் கிண்டில் 10வது தலைமுறை மாடல் இந்தியாவில் கூடுதல் சிறப்புகளுடன் 7,999 ரூபாய் விலையில் விற்பனைக்கு வெளியிப்பட்டுள்ளது. மிக சிறந்த முறையில் வாசிப்பின் தேவைக்கேற்ப ஒளியை மேம்படுத்த பிரெண்ட் லைட் வசதியுடன் வந்துள்ளது.

அமேசான் கிண்டில் சிறப்புகள்

6 அங்குல டிஸ்பிளே 600 x 800 பிக்சல் வசதியைக் கொண்டுள்ள, இந்த கிண்டிலில் 4ஜிபி மெமரி வசதி உள்ளதால் ஆயிரக்கணக்கான மின் புத்தகங்களை டவுன்லோடு செய்து படிக்க
முடியும் வகையில் அமைந்துள்ளது.

160 x 113 x 8.7 மிமீ அளவுகளை கொண்ட இந்த ரீடரின் எடை 174 கிராம் மட்டும். எனவே நீண்ட நேரம் படிக்கும் போது இலகுவாக கைகளில் வைத்துக்கொள்ள உதவும். இந்த கின்டில் 10 வது தலைமுறையில் வைஃபை உடன் வழங்கப்பட்டுள்ள பேட்டரி முன் லைட் போன்ற தேவைகள் இருந்தாலும் அதிகபட்சமாக ஒரு வாரம் வரை படிக்க உதவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய சாதனத்தில் புதுவிதமான வாசிப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இப்போது, நீங்கள் ஒரு புத்தகம் வாசித்து முடித்தால், அது தானாக உங்கள் நூலகத்தில் வாசிக்கப்பட்டது என்று குறிக்கப்பட்டிருக்கும். கின்டெல் உடன் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டுகளுக்கான இலவச கின்டெல் பயன்பாடுகள் உட்பட உங்கள் வாசிப்பு சாதனங்களில் வழங்கப்படும்.

கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்க உள்ள அமேசான் கின்டில் சாதனத்திற்கு முன்பதிவு செய்து வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 200 மதிப்புள்ள நூல்களுக்கு 100 சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும். மேலும் ரூபாய் 1,199 இரண்டு வருட நீடிக்கப்பட்ட வாரண்டி இலவசமாக வழங்கப்படும்.

இந்தியாவில் ரூ.7,999 விலையில் அமேசான் கிண்டில் வெளியானது

இதுதவிர அமேசான் இந்தியா நிறுவனம், கருப்பு, வெள்ளை,  நீலம் மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் பாதுகாப்பு சார்ந்த ஃபேபரிக் கவர்களை அளிக்கின்றது. இதன் விலை ரூபாய் 1,499 ஆகும்.