Samsung Galaxy A2 Core

இந்தியாவில் ஏப்ரல் மாத இறுதியில் விற்பனைக்கு வெளியாக உள்ள சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போன் விலை ரூ. 5290 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்பாக கேலக்ஸி ஏ2 கோரின் விபரங்கள் அனைத்தும் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் வெளியான ரெட்மி கோ ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ. 4499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த மாடலுக்கு போட்டியாக ஏ2 கோர் விளங்க உள்ளது.

சாம்சங் கேலக்ஸி A2 கோர் சிறப்புகள்

குறைந்த விலை ஸ்மார்ட்போன் மாடலாக 4ஜி ஆதரவை பெற்ற கேலக்ஸி A2 கோரில் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை பின்பற்றிய இலகுவான ஆண்ட்ராய்டு கோ செயல்படுத்தப்பட்டிருக்கும்.

5 அங்குல திரை யுடன் கூடிய 540 x 960 பிக்சல் தீர்மானம் பெற்று 16:9 ஆஸ்பெகட்ட் விகிதம் கொண்ட A2 கோரில் 1.6GHz ஆக்டோ கோர் சாம்சங் எக்ஸ்னோஸ் 7870 SoC கொண்டதாகவும், 1 ஜிபி ரேம் உடன் 8 ஜிபி உள் சேமிப்பு பெற்றிருக்கும். கேமரா பிரிவில் 8 மெகாபிக்சல் சென்சார் பின்புறத்திலும் , செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு என 5 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டிருக்கும்.

ஆண்ட்ராய்டு 9 (கோ எடிசன்) அடிப்படையில் செயல்படும் இந்த மொபைல் போனில் 4ஜி வோல்ட்இ ஆதரவுடன் வரவுள்ளது. இந்த போனை இயக்க 2,600mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.

தற்போது ஆன்லைனில் வெளியினான ஏ2 கோரின் தொடர்பான செய்தியின் அடிப்படையில் சாம்சங் கேலக்ஸி A2 கோரின் விலை ரூபாய் 5,290 ஆக இருக்கலாம்.  இந்த போன் நீலம், சிவப்பு மற்றும் கிரே நிறங்களில் தற்போது ஆஃப்லைன் மூலம் விற்பனைக்கு கிடைக்கும்.