Apple: ஆப்பிள் 2019 ஐபோன் மாடல்களில் டிரிப்ள் கேமரா செட்டப் அம்சம்

ஆப்பிள் நிறுவனம், நடப்பு ஆண்டில் இரண்டு ஐபோன் மாடல்களை டிரிப்ள் கேமரா செட்டப் கொண்டதாக விற்பனைக்கு வெளியிட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதன் மூலம் 2019 ஐபோன் மாடல்கள் சீன நிறுவனங்களை எதிர்கொள்வதுடன் அதிக திறன் வாய்ந்த பேட்டரிகளை கொண்டதாக இருக்கும் என கருதப்படுகின்றது.

2019 ஆப்பிள் ஐபோன் சிறப்புகள்

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஆப்பிள் ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களை போன்றே இந்த ஆண்டும் பல்வேறு சிறப்புகளை கொண்டதாக ஸ்மார்ட்போனை வெளியிட ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக இந்த ஆண்டு வெளிவரும் ஐபோன் 6.1 அங்குல திரை மற்றும் 6.5 அங்குல OLED டிஸ்பிளே பெற்று, பின்புறத்தில் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டிருக்கும். இது தற்போது விற்பனையில் உள்ள ஐபோன் XR மாடலை விட திறன் மிகுந்த கேமரா மாடலாக விளங்கும் என கருதப்படுகின்றது.

Apple: ஆப்பிள் 2019 ஐபோன் மாடல்களில் டிரிப்ள் கேமரா செட்டப் அம்சம்

மிக விரைவான சார்ஜிங் அம்சத்துடன் , வயர்லெஸ் சார்ஜிங் போன்றவற்றை ஆதரிக்கும் அதிக திறன் பெற்ற பேட்டரி இந்த போனில் பயன்படுத்தப்பட்டிருக்கும் என குறிப்பிடப்படுகின்றது. ஆப்பிள் நிறுவன 2019 ஐபோன் மாடல்கள் ஆனது iPhone XIR, iPhone XIS, மற்றும் iPhone XIS Max என அழைக்கப்படலாம் என ஆன்லீக்ஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் முன்பே குறிப்பிட்டிருந்தது.