ஐபோன் X மற்றும் 13 இன்ச் மேக்புக்கில் ஏற்பட்ட பிரச்சினைகள் இலவசமாக சரி செய்யப்படும்: ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு

ஐபோன் X மற்றும் 13 இன்ச் மேக்புக்கில் ஏற்பட்ட பிரச்சினைகள் உள்ளதை ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஒப்பு கொண்டது. இதை தொடர்ந்து தனது தயாரிப்புகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை இலவசமாக சரி செய்து கொடுப்பதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்தியில்
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் X போன்களை கடந்த 2017ம் ஆண்டில் 999 டாலர் விலையில் அறிமுகம் செய்தது. இதில் சில டச் ஸ்கிரீன்களில் பிரச்சினைகள் உள்ளதாக தெரிய வந்தது.

இதனால் இந்த போன்களை, பயன்படுத்துபவர்களுக்கு இந்த பிரச்சினை காரணமாக பல்வேறு பிரச்சினை ஏற்பட்டதாக தெரிய வந்தது. இதுமட்டுமின்றி ஐபோன் நிறுவனம் வெளியிட்ட 13 இன்ச் மேக் புக் புரோ கம்ப்யூட்டர்களிலும் டேட்டா லாஸ் மற்றும் ஸ்டோரேஜ் டிரைவ் பெயிலியர் போன்ற பிரச்சினை வந்தது.

ஐபோன் X மற்றும் 13 இன்ச் மேக்புக்கில் ஏற்பட்ட பிரச்சினைகள் இலவசமாக சரி செய்யப்படும்: ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு

கடந்த ஜூன் மாதத்தில் ஆப்பிள் நிறுவன் மேக் புக் மற்றும் மேக்புக் புரோ மாடல்களில் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து, இலவமாக கீபோர்டுகளை மாற்றி கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.