Apple inc. logo

ஆப்பிள் நிறுவனம், முதல் 5ஜி தொலைத்தொடர்பு ஆதரவினை பெற்ற ஐபோன் மாடலை 2020 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பொதுவாக தனது ஐபோன்களில் இன்டெல் சிப்செட் பயன்படுத்துவது வழக்கமாகும்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் , ஹூவாய் போன்ற நிறுவனங்கள் 5ஜி மோடம் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் நிலையில், சாம்சங் மற்றும் மீடியாடெக் போன்ற நிறுவனங்கள் தற்போது தீவரமான தயாரிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இன்டெல் நிறுவனம் முதல் 5ஜி மோடத்தை இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யலாம் என கருதப்படுகின்றது.

ஆப்பிள் 5ஜி ஐபோன் வருகை விபரம்

முன்பே வெளிவந்த சில ரிபோர்ட்டுகளின் படி இன்டெல் நிறுவனம்,  7 என்எம் இன்டெல் XMM 8160 5ஜி மல்டி மோடத்தை தயாரித்து வருகின்றது. அதன் அடிப்பையில் பல்வேறு மேம்பாடுகள் மற்றும் திறன் சார்ந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றது.

முதற்கட்டமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களுக்கான சிப்செட் சப்ளை இந்த ஆண்டின் இறுதியில் சோதனை முயற்சியாக தொடங்கப்பட்ட வாய்ப்புகள் உள்ளது. அதனை தொடர்ந்து முதல் 5ஜி ஆதரவை பெற்ற ஐபோன் மாடலை 2020 ஆம் ஆண்டின் மத்தியில் வெளியிடப்படலாம்.

மேலும் , ஆப்பிள் தனது சொந்த முயற்சியில் 5ஜி சிப்செட்டுகளை உருவாக்கும் திட்டத்தின் தொடக்க நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், இந்நிறுவனம் தனது சொந்த 5ஜி மோடத்தை 2021 ஆம் ஆண்டில் உற்பத்திக்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

போட்டியாளரான ஹூவாவே மேட் எக்ஸ் 5ஜி மொபைல் மற்றும் சாம்சங் நிறுனம் உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலாக கேலக்ஸி எஸ்10 5ஜி மொபைல் மாடலை கொரியாவில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.