பட்ஜெட் விலையில் வெளியான புதிய ஆப்பிள் ஐபேட் விபரம் : ஆப்பிள் நிறுவனம்

மாறி வரும் சந்தை சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் நோக்கில் தனது பிரிமியம் பிராண்டு மதிப்பினை பாதிக்காத வகையில் பட்ஜெட் விலையில் புதிய ஆப்பிள் ஐபேட் கருவியை கல்வி சார்ந்த மென்பொருள்கள் விழாவில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

புதிய ஆப்பிள் ஐபேட்

ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ஆப்பிள் ஐபேட் 9.7 அங்குல கருவியில் கூடுதலாக ஆப்பிள் பென்சில் பயன்படுத்தும் வகையிலான வசதியுடன்  A10 சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்ற இந்த ஐபேடில் உயர்தரமான படங்களை பதிவு செய்யும் வகையிலான கேமரா உட்பட பல்வேறு வசதிகளை கொண்டிருக்கின்றது.

புதிய 9.7 இன்ச் ஐபேட் மாடலில் ஆப்பிள் பென்சில் ஸ்டைலஸ் பயன்படுத்தும் வசதி கூடுதலாக வழங்கப்படுகிறது. எனினும் புதிய பென்சில் வாங்க கூடுதலாக ரூ.7,600 கூடுதலாக செலுத்த வேண்டும். ஆப்பிள் பென்சிலுடன் பிரத்தியேகமான செயலிகளும் வழங்கப்படுகின்றன. இத்துடன் லாகிடெக் கீபோர்டு, கிரேயான் பென்சில் உள்ளிட்ட மூன்றாம் தரப்பு சாதனங்களையும் சப்போர்ட் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதிய ஆப்பிள் ஐபேட் 32 ஜிபி வைபை மாடல் விலை ரூ.28,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபேட் 32 ஜிபி, வைபை மற்றும் செல்லுலார் மாடல் விலை ரூ.38,600 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களுக்குள் இந்திய சந்தையில் அதிகார்வப்பூர்வமாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது.