ஆப்பிள் ஐபேட் ஏர், ஐபேட் மினி

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய 10.5 அங்குல ஆப்பிள் ஐபேட் ஏர் மற்றும் 7.9 அங்குல ஆப்பிள் ஐபேட் மினி என இரு மாடல்களும் ஆப்பிள் பென்சில் கொண்டு இயக்கம் வகையில் அமைந்திருப்பதுடன், புதிய செயல்திறன் மிக்க A12 Bionic கொண்டு இயக்கப்படுகின்றது.

இந்தியாவில் விலை அறிவிக்கப்பட்டுள்ள ஆப்பிள் ஐபேட் ஏர் ரூபாய்  44,900 என தொடங்கிய ஒய்-ஃபை பெற்ற மாடல் அடுத்து ஒய்-ஃபை மற்றும் செல்லூலார் பெற்ற ஐபேட் ஏர் விலை ரூபாய் 55,900 எனவும், ஆப்பிள் ஐபேட் மினி மாடலின் தொடக்க நிலை வேரியன்ட் ஒய்-ஃபை பெற்ற மாடல் ரூபாய் 34,900 எனவும், ஒய்-ஃபை + செல்லூலார் கொண்ட மாடல் விலை ரூபாய் 45,900 என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபேட் ஏர், ஐபேட் மினி

தனியாக ஆப்பிள் பென்சில் விலை ரூ.8,500 அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்பிள் ஐபேட் ஏர் மாடலுக்கான ஸ்மார்ட் கீபோர்டு விலை ரூபாய் 13,900 எனவும், பாலியுரேதேன் கவர் ஐபேட் ஏர் மாடலுக்கு ரூபாய் 3500 எனவும், ஐபேட் மினி மாடலுக்குரூபாய் 3,700 என கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 27 நாடுகளில் கிடைக்க தொடங்கியுள்ள இந்த கருவிகள், இந்தியாவில் விலை அறிவிக்கப்பட்டாலும் அதிகார்வப்பூர்வ தேதி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

ஆப்பிள் ஐபேட் ஏர் மற்றும் ஆப்பிள் ஐபேட் மினி

ஆப்பிள் பென்சில் ஆதரவை கொண்ட ஆப்பிள் ஐபேட் ஏர் மாடலில் 10.5 அங்குல காட்சி திரையுடன் புதிய ஐபோன்களில் பயன்படுத்தப்பட்ட ஆப்பிள் ஏ12 பையோனிக் சிப்செட் பிராசஸரை பெற்று முந்தைய மாடலை விட 70 சதவீத கூடுதல் செயல்தறன் வழங்கவல்லதாக விளங்குகின்றது.

இரு மாடல்களும் சில்வர் , ஸ்பேஸ் கிரே மற்றும் கோல்டு நிறங்களை பெற்று கேமரா பிரிவில் 7 எம்பி செல்ஃபி மற்றும் ஃபேஸ்டைம் கேமரா உடன் பிரைமரி ஆப்ஷனில்  8 எம்பி கேமரா கொண்டதாக விளங்குகின்றது.

apple ipad air

Apple iPad Air 10.5-inch (2019) / Apple iPad Mini (2019) specifications

 •  iPad Air மாடல் 10.5-inch (2224 x 1668 pixels) ரெட்டினா டிஸ்பிளே P3 Color Gamut, 500 nits, 264 PPI
 • iPad Mini மாடல் 7.9-inch (2048  x 1536 pixels) ரெட்டினா டிஸ்பிளே P3 Color Gamut, 500 nits, 326 PPI
 • Octa-Core A12 Bionic 7nm சிப் உடன் 64-bit வழங்கப்பட்டு M12 மோஷன் கோ பராசெஸர்
 • 64GB மற்றும் 256GB சேமிப்பு
 • iOS 12
 • 8MP கேமரா உடன் f/2.4 துளை, 5P lens, ஹைபரிட் IR ஃபில்டர்
 • 7MP முன்பக்க கேமரா ஃபேஸ்டைம் ஹெச்டி கேமரா f/2.2, ரெட்டினா ஃபிளாஷ்
 • 4G LTE (ஆப்ஷன்), Wi‑Fi 802.11 ac (2.4GHz and 5GHz); HT80 with MIMO, ப்ளூடுத்  5.0
 • டச் ஐடி
 • iPad Air அளவுகள் 250.6x 174.1x 6.1mm;  எடை 456g (WiFi) / 464g (4G)
 • iPad Mini அளவுகள் 203.2x 134.8x 6.1mm; எடை 300.5g (WiFi) / 308.2g (4G)
 •  30.2-watt-hour (iPad Air) / 19.1-watt-hour (iPad Mini) ரீசாரஜிங் பேட்டரி

இந்தியாவில் ஆப்பிள் ஐபேட் ஏர், ஐபேட் மினி விற்பனைக்கு அறிமுகம்