ஆப்பிள் ஐபோன் 12, ஐபோன் 12 மினி மொபைல் விலை மற்றும் சிறப்புகள்

ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஐபோன் 12 வரிசையில் ஐபோன் 12, ஐபோன் 12 மினி, ஐபோன் 12 புரோ, மற்றும் ஐபோன் 12 புரோ மேக்ஸ் என மொத்தமாக நான்கு மாடல்களை வெளியிட்டுள்ளது. தற்போது வந்துள்ள புதிய மாடல்கள் அனைத்தும் 5ஜி ஆதரவினை பெற்றுள்ளன.

ஆப்பிள் ஐபோன் 12 சிறப்புகள்

64 ஜிபி சேமிப்பு பெற்ற ஆப்பிள் ஐபோன் 12 விலை ரூ.79,900 விலை துவங்குகின்ற நிலையில் 128 ஜிபி , மற்றும் 256 ஜிபி என மூன்று விதமான சேமிப்பை கொண்டுள்ளது.  5.4 அங்குல 2340 × 1080 பிக்சல் தீர்மானத்துடன் OLED 476ppi சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, 1200 நைட்ஸ் பிரகாசம், பீங்கான் கேடயம் பாதுகாப்பிற்கு சேர்க்கப்பட்டுள்ளது. 64 பிட் கட்டுமானத்தை பெற்ற குவாட் கோர் கிராபிக்ஸ் கொண்ட சிக்ஸ் கோர் ஏ-14 பயோனிக் 5 என்எம் சிப்செட் பெற்றுள்ளது.

டூயல் கேமரா ஆப்ஷனை பெற்ற ஐபோன் 12-யில் பிரைமரி சென்சார் 12 எம்பி கேமரா உடன் 12 எம்பி அல்ட்ரா வைட் ஏங்கிள் சென்சார் இடம்பெற்றுள்ளது.  இந்த கேமராக்களில் 4K வீடியோ பதிவு, 60 fps, ஸ்லோ – யூ 1080p மற்றும் 240 fps பதிவினை மேற்கொள்ளலாம்.

செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 12 எம்பி சென்சார் இடம்பெற்றுள்ளது. இந்த கேமராவிலும் 4K வீடியோ பதிவு, 60 fps, ஸ்லோ – யூ 1080p மற்றும் 240 fps பதிவினை மேற்கொள்ளலாம்.

ஆப்பிள் 12 (Apple iPhone 12) விலை எவ்வளவு ?

5ஜி ஆதரவை பெற்ற புதிய ஆப்பிள் ஐபோன் 12 ஸ்மார்ட்போனின் 64 ஜிபி மாடல் விலை ரூ.79,900, 128ஜிபி மாடல் விலை ரூ.84,900 மற்றும் 256 ஜிபி விலை ரூ.94,900 ஆகும்.

ஆப்பிள் ஐபோன் 12, ஐபோன் 12 மினி மொபைல் விலை மற்றும் சிறப்புகள்

ஆப்பிள் ஐபோன் 12 மினி

குறைந்த விலை ஐபோன் 12 வரிசையின் மாடல்களான மினி பொதுவாக பெரும்பாலான அம்ங்களை ஐபோன் 12-ல் இருந்து பகிர்ந்து கொள்ளுகின்றது. கேமரா ஆப்ஷனை பொருத்தவரை, டூயல் கேமரா ஆப்ஷனை பெற்ற ஐபோன் 12 மினி பிரைமரி சென்சார் 12 எம்பி கேமரா உடன் 12 எம்பி அல்ட்ரா வைட் ஏங்கிள் சென்சார் இடம்பெற்றுள்ளது.  இந்த கேமராக்களில் 4K வீடியோ பதிவு, 60 fps, ஸ்லோ – யூ 1080p மற்றும் 240 fps பதிவினை மேற்கொள்ளலாம்.

செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 12 எம்பி சென்சார் இடம்பெற்றுள்ளது. இந்த கேமராவிலும் 4K வீடியோ பதிவு, 60 fps, ஸ்லோ – யூ 1080p மற்றும் 240 fps பதிவினை மேற்கொள்ளலாம்.

ஐபோன் 12 மினி மாடல் 6.1 அங்குல 2532×1170 பிக்சல் தீர்மானத்துடன் OLED 476ppi சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, 1200 நைட்ஸ் பிரகாசம், பீங்கான் கேடயம் பாதுகாப்பிற்கு சேர்க்கப்பட்டுள்ளது. 64 பிட் கட்டுமானத்தை பெற்ற குவாட் கோர் கிராபிக்ஸ் கொண்ட சிக்ஸ் கோர் ஏ-14 பயோனிக் 5 என்எம் சிப்செட் பெற்றுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 12 மினி (iPhone 12 Mini) விலை எவ்வளவு ?

குறைந்த விலை ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ் 5ஜி ஆதரவை கொண்ட ஐபோன் 12 மினி ஸ்மார்ட்போனின் 64 ஜிபி மாடல் விலை ரூ.69,900, 128ஜிபி மாடல் விலை ரூ.74,900 மற்றும் 256 ஜிபி விலை ரூ.84,900 ஆகும்.

மற்ற அம்சங்கள்

பொதுவாக இரு மாடல்களும் Magsafe வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்துடன், 5ஜி ஆதரவுடன் அதிகபட்சமாக 4Gbps இணைய வேகத்தை பெற்றுள்ளது. ஆப்பிள் ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 கருப்பு, நீலம், சிவப்பு, சாம்பல் மற்றும் வெள்ளை வண்ணங்களில் வருகின்றது.

ஐபோன் 12 அக்டோபர் 30 ஆம் தேதி முதல் இந்தியாவில் ஆப்பிள் அங்கீகரிக்கப்பட்ட மறு விற்பனையாளர்கள் மூலமாகவும், ஐபோன் 12 மினி நவம்பர் 13 முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

web title : Apple iPhone 12, iPhone 12 mini launched in India: Here’s all you need to know